Pages

Tuesday, 2 June 2015

பூட்டெல்லாம் நமது திருப்திக்காகவே

    பூட்டெல்லாம் நமது திருப்திக்காகவே
    .
    எங்கள் வீட்டின் பின்புறம் உள்ள கிரில் கேட்டிற்கான சாவி தொலைந்துவிட்டது. அதில் உட்புறமும் வெளிப்புறமாக இரண்டு பூட்டுக்கள் போடப்பட்டிருந்தது. அந்த பூட்டுக்களை திறக்க ஒரு பூட்டு திறப்பவரை அணுகினேன். அவர் அந்த பூட்டுக்களை உடைத்துதான் எடுக்க முடியும் என்று அவரது 15 வயது மகனை அனுப்பி வைத்தார். அவன் ஒரு சின்ன சுத்தியல் மற்றும் ஒரு உளியுடன் என் வீட்டிற்கு வந்தான்.
    .
    ...
    உளியை எடுத்து பூட்டில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வைத்து சுத்தியலால் ஒரே அடி. பூட்டு உடைந்து விட்டது. மற்றொரு பூட்டு பிரபலமாக கம்பெனி பூட்டு. இரண்டு அடி பூட்டு உடைந்துவிட்டது. கொஞ்ச நேரம் எனக்கு பிரமிப்பு தாங்கவில்லை. இரண்டு பூட்டுகளும் தலா ரூபாய் 350 மற்றும் 550 மதிப்பிலானது. வெறும் இரண்டு அடி சரியான இடத்தில் அடித்தால் அதன் உறுதித்தன்மை அவ்வளவுதானா?
    .
    அந்த பையனிடம் கேட்டால் ‘சார் நீங்க சாவி வைத்து கள்ளர்கள் திறப்பார்கள் என்று நினைக்கிறீர்களா? ஒரு அடியில் மார்க்கெட்டில் உள்ள அனைத்து பூட்டுகளும் வாயை திறந்துவிடும்’ என்று கூறினான்.
    .
    எனது மனதில் எழுந்த கேள்வி?
    .
    உறுதியற்ற பூட்டுக்களை யாருக்காக போடுகின்றோம். பூட்டை உடைத்து வீட்டில் திருடன் திருடினால், ‘பூட்டை உடைத்து வீடு திருடப்பட்டது’ என்று பேப்பரில் செய்தி வருவதற்கா?
    .
    பூட்டின் உறுதி தன்மையை பார்த்து, கடையில் சென்று ரூபாய் 150-க்கு ஒரு பூட்டு வாங்கி அந்த இடத்தில் பொறுத்தினேன்.
    .
    பூட்டெல்லாம் நமது திருப்திக்காகவே

No comments:

Post a Comment