பார்வை பறிபோன
குழந்தைக்கு உச்சநீதிமன்றம் 1 கோடியே 38 இலட்சம் இழப்பீடு மற்றும் செய்த
செலவுக்காக ரூ.42,87, 921 திரும்ப வழங்க உத்திரவு.
.
அரசு
மருத்துவமனையில் 29ம் வாரத்தில் குறைமாத
பெண் குழந்தை பிறக்கின்றது. பிறக்கும்போது
குழந்தையின் எடை 1,250 கிராம். குழந்தை இன்குபேட்டரில் ஐ.சி.யு.-ல் 25 நாட்கள்
வைக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பி
வைக்கப்படுகின்றது. மருத்துவமனையில்
குழந்தையின் தேவை கருதி அதற்கு இரத்தம் ஏற்றப்படுகின்றது. குழந்தையின் பெற்றோர்
தொடர்ந்து குழந்தையை மருத்துவமனையில் கொண்டு வந்து காண்பித்து கொண்டிருக்கின்றார்கள்.
மருத்துவர்கள், குழந்தைக்கு தொற்று நோய் பரவாமல் இருக்கும் வகையில், தனியாக வைத்து பார்த்து கொள்ளுமாறு அறிவுரை
கூறுகின்றார்கள். குழந்தையை வேறு ஒரு மருத்துவமனைக்கு 4.5 மாதங்கள் கழித்து
தடுப்பூசி போட எடுத்து செல்லும்போது, அந்த குழந்தைநல மருத்துவர் குழந்தைக்கு Retinopathy of Prematurity (இனிவரும் இடங்களில் ROP என்று குறிப்பிடப்படுகின்றது) இருப்பதாக கூறுகின்றார்.
பெற்றோர்கள்
குழந்தையை பல கண் மருத்துவமனைக்கு எடுத்து செல்கின்றார்கள். ஆனால், காலம்
கடந்துவிட்டதால், குழந்தையின் கண் பார்வையை காப்பாற்ற முடியாத நிலை ஏற்படுகின்றது. குழந்தை குறை
மாதத்தில் பிறக்கும்போதும் மற்றும் குழந்தைக்கு இரத்தம் மாறுதல் செய்யும்போது, குழந்தைகளுக்கு ROP வர வாய்ப்புண்டு.
இதை ஆரம்பத்தில் கண்டுபிடித்ததால் அதை தடுக்கலாம். இது சம்பந்தமாக மருத்துவ
குறிப்புகள் கீழ் கண்டவாறு எடுத்துரைக்கின்றது
.
“All infants with a birth weight less than 1500 gms or gestational age less
than 32 weeks are required to be screened ROP” (AIIMS Report dated 21.08.2007).
.
ROP பொதுவாக குழந்தை பிறந்த 2 - 4 வாரத்திற்குள் வர ஆரம்பித்துவிடும். அரசு
மருத்துவர்கள் இந்த குழந்தைக்கு இந்த நோய் வந்துள்ளதா என்று பார்க்க
தவறிவிட்டார்கள். குழந்தையை அரசு
மருத்துவர்கள் அவர்களது சொந்த கிளினிக்கில் வைத்தும் பார்த்திருக்கின்றார்கள்
ஆனால் இந்த நோய் இருக்கின்றதா என்பதில் கவனம் செலுத்தவில்லை. ஆகவே, மருத்துவர்களின்
கவனக்குறைவால் கண் பார்வை இழந்ததாக தேசிய நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையம் 5
இலட்சம் இழப்பீடு வழங்க ஆணையிடுகின்றது.
இழப்பீடு மிக குறைவானது என்று பெற்றோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கை எடுத்து
செல்கின்றார்கள்.
.
உச்சநீதிமன்றமானது, வாழ்நாள்
முழுவதும் இருட்டையே வாழ்க்கையாக வாழும் நிலைக்கு குழந்தை தள்ளப்பட்டதால் இதுவரை
செய்த மருத்துவ செலவினங்களுக்கு ரூ.42,87,921 இழப்பீடு வழங்கவும் அதில் 40
இலட்சத்தை அரசு வழங்கவேண்டும் என்றும் ரூ.2,87,921-யை மேற்படி இரண்டு டாக்டர்களும்
சேர்ந்து வழங்கவேண்டும் மற்றும் வருங்கால மருத்துவ செலவினங்களை (அடுத்த 51
வருடங்களுக்கு கணக்கிட்டு) கருத்தில் கொண்டு 1 கோடியே 38 இலட்சம் வழங்கவும், இதில் 1 கோடியே 30
இலட்சத்தை அரசு வழங்கவேண்டும் என்றும் ரூ.8 இலட்சத்தை இரண்டு மருத்துவர்களும்
ஒவ்வொருவரும் ரூ.4 இலட்சம் வழங்கவேண்டும் என்று தீர்ப்பு அளித்துள்ளது.
.
(இந்த வழக்கின்
முழு விபரத்தை அறிய வேண்டுமானால், Consumer Protection
Judgment - Law Journal - III (2015) CPJ 15 (SC) படித்து தெரிந்து கொள்ளுங்கள்)
No comments:
Post a Comment