Pages

Wednesday, 28 October 2015

மருத்துவத்துறையில் நுகா்வோா் குறைதீா்க்கும் சட்டத்தின் தாக்கம்

ஓவ்வொரு தொழிலும் சேவை குறைபாடுகள் இருக்கத்தான் செய்கின்றது.  ஆனால் சமீப காலங்களில் மருத்துவத்துறை சேவை குறைபாடுகள் என்பது நுகர்வோர் குறைதீர்க்கும் மன்றங்கள் வந்த பிறகு அதிக அளவில் பேசப்படுகின்றன. சமீப காலத்தில் நுகர்வோர் குறைதீர்க்கும் மன்றங்கள் மருத்துவ சேவை குறைபாடு என்றால், இழப்பீடு பல இலட்சங்களில் அனுமதிக்கப்படுகின்றது. உச்சநீதிமன்றமானது ஒரு தீர்பில் மருத்துவ சேவை குறைபாட்டால் கண் இழந்த குழந்தைக்கு ஏற்படும் வருங்கால இன்னல்களையும் கருத்தில் கொண்டு ஒரு கோடியே 38 இலட்சம் இழப்பீடு வழங்கியுள்ளது. இவ்வாறான இழப்பீடுகளை மருத்துவத்தொழில் எதிர்நோக்கினால், மேற்கத்திய நாடுகள் மாதிரி தங்கள் மருத்துவ தொழிலை அதிக அளவில் காப்பீடு செய்து நடத்த வேண்டிய நிலைக்க மருத்துவாகள் தள்ளப்படுவார்கள்.
.
மற்ற மாநிலங்களை பார்க்கும் போது தமிழகத்தில், மருத்துவர்கள் மீது சேவை குறைபாடு என்று வழக்கிடும் எண்ணிக்கை மிகவும் குறைவு. அதற்கு  காரணம்இன்றும் மருத்துவர்கள் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கை.
.
ஒரு மருத்துவர் ஒரு அறுவை சிகிச்சை செய்யும்போது அவர் மனதானது அந்த உயிரை காப்பற்றுவதில் மட்டுமே இருக்க வேண்டும். அதைவிட்டு, அவர் மனதில் ஒரு நொடிப்பொழுதுநுகர்வோர் குறைதீர்க்கும் மன்றம்வந்து போனாலும், அது நோயாளியின் நலனுக்கு நல்லதாக அமையாது.
.
தற்போது, அரசு மருத்துவமனைகளையும்நுகர்வோர் குறைதீர்க்கும் மன்றங்களின்எல்கைக்குள் கொண்டு வந்தாகிவிட்டது. சமீபத்திய உயர்நீதிமன்ற தீர்ப்புகளில், அரசு மருத்துவமனையில் நடந்த மருத்துவ சேவை குறைபாட்டிற்கு அரசு மருத்துவர்களை நேரடியாக பொறுப்பாக்கி அவர்களையே இழப்பீடு கொடுக்குமாறு ஆணையிட்டுள்ளார்கள்.
.
இளையதலைமுறை மருத்துவர்கள், மருத்துவ பட்டப்படிப்பு முடித்தவுடன் அரசு வேலைக்கு திரும்பாமல் தனியார் மருத்துவமனையை நாடிச் செல்கின்றார்கள். அரசு மருத்துவர்கள் இவ்வாறு தங்கள் கையில் இருந்து இழப்பீட்டை செலுத்தும் நிலை வந்தால், இன்னும் கொஞ்ச நாளில் அரசு மருத்துவமனைகளுக்கு மருத்துவர்கள் கிடைப்பதே அரிதாக இருக்கும்.
.
அரசு ஊழியர்கள் அனைவரும் ஒரு சிறு தொகை செலுத்துவதன் மூலம் உடல்நல காப்பீடு பெறுவது போல, இனிமேல் அரசு மருத்துவர்களுக்கும் மருத்துவ தொழில் பாதுகாப்பு காப்பீடு திட்டம் மிக அவசியமானதாகும். அந்த காப்பீட்டு திட்டத்தை அரசு செயல்படுத்த முன் வரவேண்டும்.
.
மேற்படி குழந்தைக்கு வழங்கியுள்ள இழப்பீடு தீர்ப்பை போல, ஒரு எழும்பு முறிவு அறுவை சிகிச்சை செய்தபின்னர் என்னால் முந்தைய மாதிரி நடமாட முடியவில்லை ஆதலால் என் வேலை பார்க்கும் திறன் பாதிக்கபடுகின்றது என்று வாதிட்டு (விபத்து கேஸ்களுக்கு இழப்பீடு கோருவது போல்) அதற்கு இழப்பீடு வழங்கப்பட்டால்,  மருத்துவர்கள் பாடு திண்டாட்டம்தான். தனி மருத்துவர் கிளினிக்கை எல்லாம் மூடிவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள். அடுத்தாக மக்கள் கார்ப்பரேட் மருத்துவமைனைக்கு முன்னால், பர்ஸ் நிறைய பணம் வைத்து கொண்டு நின்றாக வேண்டும்.  மத்திய அரசானது தகுந்த சட்ட வடிவை கொண்டு வந்து, மருத்துவ சேவை குறைபாட்டிற்கு, அதிகபட்ச அளவு இழப்பீட்டு தொகையை நிர்ணயம் செய்ய வேண்டும்.
.

மருத்துவர்கள்  சட்டரீதியான பிரச்சனைகளை எதிர்கொள்ளும் வகையில் மாதம் ஒரு முறை .எம்.. மீட்டிங்கில் மருத்துவ சேவை குறைபாட்டால் இழப்பீடு கொடுக்கப்பட்ட வழக்குகளை பற்றி விவாதிக்க வேண்டும். இந்த வகையில், தவறு எங்கு ஏற்படுகின்றது அதை எப்படி இனிமேல் தடுக்கலாம் என்ற ஒரு புரிதல் மருத்துவர்களுக்கு எற்படும்மேலும் ஐ.எம்.ஏ-யானது மக்களுடன் கூடிய கருத்தரங்கு நடத்தி மருத்துவ சேவையில் மருத்துவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மக்களுடன் விவாதிக்க வேண்டும். இந்த வகையில் மக்களுக்கும் மருத்துவர்களுக்கும் உள்ள இடைவெளி குறைந்து மருத்துவர்களை தங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைக்கும் எண்ணம் உருவாகும்.

No comments:

Post a Comment