தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையம், தாலுகா மருத்துவமனை, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, மருத்துவ கல்லுாரிகள் மூலமாக சிறப்பான மருத்துவ சேவையை தமிழக அரசு மக்களுக்கு வழங்கி வருகின்றது.
.
ஒவ்வொரு மருத்துவமனையிலும் அதன் தகுதி நிலைக்கு ஏற்ப மருத்துவ வசதிகள் அளிக்கப்படுகின்றது. ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு நோயாளிக்கு மருத்துவம் அளிக்க போதுமான வசதி இல்லாதபோது நோயாளியை அந்த மாவட்டத்தின் தலைமை மருத்துவமனைக்கு அல்லது அருகில் உள்ள மருத்துவக் கல்லுாரிக்கு மாறுதல் செய்வார்கள். இதை ஆங்கிலத்தில் 'Referral' என்று அழைக்கின்றார்கள். அதுபோலவே, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஏதாகிலும் நோயாளியின் மருத்துவ தேவைக்கேற்ப போதிய வசதி இல்லை என்றால் அருகில் உள்ள மருத்துவக் கல்லுாரிக்கு referral செய்வார்கள்.
.
இந்த referral என்பது நோயாளியின் நலம் கருதியே செய்யப்படுகின்றது. ஆனால், பல நேரங்களில் நோயாளியின் உறவினர்கள் இந்த ‘referral’ என்பதின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளாமல், நோயாளியை அனுப்ப நினைக்கும் மருத்துவமனை ஊழியர்களிடம் வீண் தர்க்கத்தில் ஈடுபடுகின்றார்கள். இந்த வீணான தர்க்க நேரத்தில் நோயாளியின் உடல்நிலை இன்னும் மோசமாகிவிடும் என்பதை பெரும்பாலும் அவர்கள் புரிவதில்லை.
.
(முன்னரெல்லாம், இவ்வாறு மருத்துவக் கல்லுாரிக்கு referral பண்ணும்போது, நோயாளியின் உறவினர்கள்தான் பணம் செலவழித்து அருகில் உள்ள மருத்துவக் கல்லுாரிக்கு நோயாளியை மாறுதல் செய்ய வேண்டும். ஆனால், தற்போது தமிழக அரசின் 108 சேவை வழியாக இந்த referral இலவசமாக அளிக்கப்படுகின்றது.)
.
ஒரு நோயாளிக்கு கூடுதலான மருத்துவ வசதி தேவைபடும்போது உடனடியாக அவரை அதிக மருத்துவ வசதி உள்ள பெரிய மருத்துவமனைகளுக்கு அனுப்ப தவறினால் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்படி அது பெரும் மருத்துவ சேவை குறைபாடு என்று கருதப்பட்டு பெருமளவு இழப்பீடு வழங்கப்படுகின்றது. ஆகவே, நோயாளியின் நலன் கருதியும் சட்டப்படியும் referral என்பது மிக அவசியமான செயலாகின்றது.
.
இன்று மருத்துவமனைகளில் நோயாளிகளை அனுமதிக்கும்போது நோயாளியிடம் ஒப்புதல் (consent) வாங்கும்போது கீழ்கண்டவற்றையும் அதில் இணைத்து கொள்வது என்பது மிக அவசியமாகின்றது.
.
“இந்த மருத்துவமனையில் எனக்கு வைத்தியம் பார்க்கும்போது, என் உடல் நிலையை கருதி மருத்துவர்கள் உயர் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு என்னை கொண்டு செல்ல வேண்டும் என்று பரிந்துரைத்தால், அந்த எதிர் நிகழ்வுக்கான சம்மதத்தை தற்போதே அளிக்கின்றேன். மேலும் அந்த சூழ்நிலையில், எனது உறவினர்கள் மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி உடனே என்னை வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்வார்கள் என்ற உறுதிப்பாட்டையும் அளிக்கின்றேன்”
.
இன்று அரசு மருத்துவமனைகளும் நுகர்வோர் பாதுகாப்பு சட்ட வளையத்திற்குள் வந்தாகிவிட்டது. ஆகவே, எந்த ஒரு நோயாளிக்கும் உயர் மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டால் அவர்களை உடனடியாக அருகில் உள்ள மருத்துவ கல்லுாரிக்கு referral பண்ணுவது என்பது மிக அவசியமாகும். தவறும் பட்சத்தில், இந்த தவறுக்கு பொறுப்பான அரசு மருத்துவர்கள் நேரடியாக இழப்பீட்டை நோயாளிக்கு செலுத்த வேண்டிய நிலை ஏற்படலாம்.
.
Referral என்பது நோயாளியின் உடல் நலம் கருதி அவசியமானது மற்றும் தவிர்க்க முடியாத செயல் என்றும், அதற்காக அனைத்து நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசின் சுகாதாரத்துறையான ஒவ்வொரு அரசு மருத்துவமனைகளிலும் ஒரு அறிவிப்பு பலகை வைத்து, மக்களுக்கு Referral-ன் அவசியத்தை பற்றி ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த முன் வரவேண்டும்.

No comments:
Post a Comment