Pages

Wednesday, 27 April 2016

குழந்தை பிறப்பில் ....ஜோதிட கணிப்பு

இன்று பெரும்பலான மகப்பேறு மருத்துவர்களுக்கு முன் நிற்கும் பிரச்சனை ‘ 7.10 - 7.20' க்குள் குழந்தையை எடுக்கவேண்டும்” (ஜோதிட நேரம்). அதிகாலை 3.30 - 3.40க்குள் கூட ஜோதிடர்கள் கணித்து கொடுக்கின்றார்கள். இந்த நேரத்தில் பிறந்தால், பிறப்பவர்கள் மகாராணியாகவோ மகாராஜாவாகவோ வருவார்கள் ???? என்று கணிப்பு.
.
பத்து நிமிடத்தில், ஸ்பைனல் அனஸ்திஸ்தியா சரியாக கொடுத்து குழந்தையை அந்த நேரத்திற்குள் எடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளுடன்தான் பேஷன்ட் வருகின்றார்கள். மறுத்தால், அடுத்த மகப்பேறு மருத்துவரிடம் செல்லும் நிலை.
.
.
குறிப்பிட்ட 10 நிமிடங்களுக்குள் பிறந்த குழந்தை நாளை ஜோதிடர் கணித்த மாதிரி மகாராஜாவாகவே அல்லது மகாராணியாகவோ வரவில்லை என்றால், அந்த குழந்தை வளர்ந்து 18 வருடங்கள் கழித்து மருத்துவரின் சேவை குறைபாட்டில்தான் (அதாவது என் பெற்றோர் குறித்த நேரத்தில் நான் பிறக்கவில்லை) என்று 5 கோடி கேட்டு வழக்கிடலாம்.
.
அந்த வழக்கில் அந்த நபர் ஜெயித்துவிட்டால், உண்மையிலேயே அந்த பணத்தை கொண்டு அவர் மகாராஜாவாகவோ, மகாராணியாகவோ வாழலாம்.
.
ஜோதிட கணிப்பும் சரியாகிவிடும்.....

(அறிந்து கொள்ள வேண்டியது -
 எந்த அறுவை சிகிச்சையானாலும், அதில் ரிஸ்க் இருக்கும். இரவு நேரங்களில் அறுவை சிகிச்சை செய்ய நிர்பந்திக்கும்போது, அறுவை சிகிச்சையின் போது நோயாளிக்கு ஏதாகிலும் எதிர்பாராத வகையில் பிரச்சனை ஏற்பட்டால், அது சம்பந்தமான மருத்துவர்கள் இரவு நேரங்களில் கிடைக்காமல் போனால், நோயாளியின் உயிர் ஆபத்தில் முடியும் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். பகல் நேரங்களில் அனைத்து மருத்துவர்களின் சேவையையும் எளிதாக பெறலாம்.  தாய்மை கொண்ட பெண்ணின் உயிர்மேல் உண்மையான அக்கறை இருப்பவர்கள், இந்த மாதிரி விபரிதமான  ஜோதிட விளையாட்டுகளில் இறங்ககூடாது) 


No comments:

Post a Comment