Pages

Monday, 25 April 2016

மருத்துவமனைகளை தரம் பிரித்து சேவை வழங்கிட வேண்டும்.

மருத்துவமனைகளை தரம் பிரித்து சேவை வழங்கிட வேண்டும்.
.
ஒருவரின் கார் பழுதாகிவிட்டது ஆகிவிட்டது. அதை அந்த கார் கம்பெனிக்கு சென்று பழுது நீக்க செல்கின்றார். அங்கு அதற்கு பழுது செலவாக ரூ.1 இலட்சம் சொல்கின்றார்கள். அவருக்கு அவ்வளவு பணம் செலவழிக்க விருப்பமில்லை. ஆகவே, காரை தனது ஊரில் உள்ள ஒரு லோக்கல் மெக்கானிக்கிடம் கொண்டு செல்கின்றார். அவர் அந்த பழுதை நீக்க ரூ.10 ஆயிரம் வேண்டும், செய்து தருவாதாக உறுதியளித்து காரை பழுது பார்த்து கொடுக்கின்றார். ஆனால், திரும்பவும் அந்த காரில் முன்...னர் இருந்த பழுது உடனே வந்து விடுகின்றது. பின்னர் திரும்பவும் அந்த காரை எடுத்து கொண்டு கம்பெனிக்கு எடுத்து செல்கின்றார். இப்போது கம்பெனியானது அந்த சிறு மெக்கானிக் தவறான உபகரணங்களை உபயோகபடுத்தியுள்ளதால், மேலும் பல பாகங்கள் பழுதடைந்துவிட்டன ஆகவே இப்போது செலவுத்தொகை 2 இலட்சம் ஆகும் என்கிறார். அவரும் வேறு வழியில்லாமல் பழுது பார்க்கின்றார்.
.
இப்போது அவர் அந்த சிறு மெக்கானிக் மேல் முறையாக பழுது பழுது பார்க்கவில்லை ஆகவேத்தான் அவருக்கு அதிக செலவினங்கள் வந்தன என்று வழக்கிடுகின்றார். இவர் பக்கம் நியாயம் உள்ளதா?
.
1) கம்பெனியில் அதிக தொகை கேட்கின்றார்கள் என்ற ஒரே காரணத்திற்காக சிறு மெக்கானிக்கை தேர்தெடுத்து இவர்தானே
.
2) சிறு மெக்கானிக்கிடம் செல்லும்போதே இவருக்கு நன்கு தெரிந்திருக்க வாய்ப்புண்டு பெரிய கம்பெனியில் உள்ள அளவு வசதிகள் அவரிடம் இருக்காது என்று.
.
3) கொடுக்கும் பணத்திற்கேற்ற சேவைதான் எப்போதும் கிடைக்கும். 10 ஆயிரம் பணம் கொடுத்து கம்பெனி அளவிற்கான சேவை கிடைக்க வாய்ப்பில்லை.

.
இதுபோலவே பல நேரங்களிலும், நம் கையில் இருக்கும் காசுக்கேற்ப மருத்துவமனைகளை தேர்தெடுத்துவிட்டு, கார்ப்பேரேட் மருத்துவமனை போன்ற சேவையை எதிர்பார்கின்றோம். அவ்வாறான சேவை கிடைக்காத பட்சத்தில், பல நேரங்களில் மருத்துவ சேவை குறைபாடு எனும் பதத்தில் அந்த சிறு மருத்துவமனையை கார்ப்பரேட் மருத்துவமனையுடன் ஒப்பிட்டு கொள்கின்றோம்.
.
நுகர்வோர் குறைதீர்க்கும் மன்றங்களும் அந்த சிறு மருத்துவமனையில் சேவை வழங்கியதை கருத்தில் கொள்ளாமல் மருத்துவ சேவை குறைபாட்டின் மீது மட்டுமே முழு கவனம் செலுத்தி தீர்ப்புகளை வழங்குகின்றது.
.
இதற்கு தீர்வு என்ன?
.
1) மருத்துவமனைகளை A, B, C, D என தரம் பிரிக்க வேண்டும்.
.
2) ஒவ்வொரு தரத்திலும் எந்தவிதமான சிகிச்சைகள் அளிக்க வசதிகள் இருக்கின்றது என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
.
3) ஒவ்வொரு தரத்திலும் மருத்துவ சேவை குறைபாடு ஏற்பட்டால் அதற்கான ஈழப்பீட்டு தொகைக்கு அதிக பட்ச அளவு நிர்ணயம் செய்யப்படவேண்டும்.
.
ரூ.50 வாங்கி வைத்தியம் பார்க்கும் மருத்துவமனையையம் பல ஆயிரங்கள் வாங்கி வைத்தியம் பார்க்கும் கார்ப்பரேட் மருத்துவமனையையும் ஒரு தரத்தில் வைக்கக்கூடாது.
.
ரூ.50-க்கு வைத்தியம் பார்க்கும் மருத்துவர்மீது மருத்துவ சேவை குறைபாடாக ரூ.1 கோடி இழப்பீடு வழங்க ஆணையிட்டால், காய்ச்சல், தலைவலிக்கு கூட மருத்துவர்கள் சேவை இந்த சமுதாயத்தில் கிடைப்பது அரிதாகிவிடும்.
.
எந்த தர மருத்துவமனையில் வைத்தியம் பார்ப்பது என்பது நோயாளியின் விருப்பத்திற்கு விடும்போது, அங்கு நடக்கும் மருத்துவ சேவை குறைபாட்டிற்கும், அவர் கொடுக்கும் கட்டணத்திற்கேற்ப இழப்பீடு வழங்கும் வகையில் வழிவகை செய்ய வேண்டும்.
(மாற்று கருத்துகள் வரவேற்கப்படுகின்றது)

No comments:

Post a Comment