Pages

Monday, 25 April 2016

சட்டத்தை மாண்புமிகு நீதியரசர்களால் உருவாக்க முடியுமா? .

சட்டத்தை மாண்புமிகு நீதியரசர்களால் உருவாக்க முடியுமா?
.
ஒரு பிரச்சனைக்கு சட்டத்தில் எங்கெல்லாம் வெற்றிடம் உள்ளதோ, அங்கு மாண்புமிகு நீதியரசர்களின் தீர்ப்புகள் சட்ட வலிமை பெறும்.
.
. Lord Denning in Re: Sigsworth “ We Fill the Gap”...
"The judges do every day make law, though it is almost heresy to say so."
.

உதாரணமாக
.
அரசு அலுவலகங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியியல் தொல்லைகளை களைய தனியாக சட்டம் ஏதுமில்லை. ஆனால், “விசாகா எதிர் இராஜஸ்தான் மாநிலம்“ எனும் வழக்கில் மாண்புமிக நீதியரசர்கள் கூறிய நெறிமுறைகள் இன்று சட்ட வலிமை பெற்று விளங்குகின்றன.
.
.
ஒருவரை காவல் துறையினர் கைது செய்தால் என்ன நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று டி.கே.பாசு எனும் வழக்கில் மாண்புமிகு நீதியரசர்கள் கூறியவை சட்ட வலிமை பெற்று விளங்குகின்றன.
.
மருத்துவ சேவை குறைபாடு என்பது “தீங்கியல் சட்டத்தின்“ ஒரு பகுதியாகும். தீங்கியல் சட்டம் பெரும்பாலான நேரங்களில் நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில் செயல்படுகின்றது. ஆகவே, மருத்துவ சேவை குறைபாடு எனும் சட்டத்தில் நீதிமன்ற தீர்ப்புகள் சட்ட வலிமை பெற்று விளங்கும்.

No comments:

Post a Comment