பிறக்கும் குழந்தையின் கழுத்தில் தொப்புள் கொடி சுற்றப்பட்டிருக்கும் படம். (இன்டொ்நெட்டில் இருந்து எடுத்த புகைப்படம்). சிசரியேன் செய்யக்கூடாது, நார்மல் டெலிவரிதான் பண்ண வேண்டும் எத்தனை உறவினர்கள் மகப்பேறு மருத்துவர்களிடம் அடம் பிடிக்கின்றார்கள். இந்த குழந்தை எப்படி நார்மல் டெலிவிரியில் பிரசவிக்க முடியும்? இந்த குழந்தையை காப்பாற்ற சிசரியேன் செய்வது அவசியமல்லவா?. ஆனால், மகப்பேறு மறுத்துவர்கள் வேண்டுமென்றே சிசரியேன் செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு அவா்கள் மீது தொடர்ந்து வைக்கப்படுகின்றது. இந்த குழந்தையை நார்மல் டெலிவரிக்கு விட்டு அந்த குழந்தை இறந்து பிறந்தால் மருத்துவர் மீது தவறு என்று மருத்துவர் மேல் நுகர்வோர் குறை தீர்க்கும் மன்றத்தில் வழக்கிடப்படும். மகப்பேறு மருத்துவர் அனைவரும் தாயையும் சேயையும் காப்பாற்ற அனைத்து நேரங்களிலும் அனைத்து முயற்சிகளையும் செய்வார்கள் என்பதை உணரவேண்டும். மேலும் மருத்துவர்கள் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment