Pages

Monday, 25 April 2016

ஓவ்வொரு தொழிலும் சேவை குறைபாடுகள் இருக்கத்தான் செய்கின்றது.  ஆனால் சமீப காலங்களில் மருத்துவத்துறை சேவை குறைபாடுகள் என்பது நுகர்வோர் குறைதீர்க்கும் மன்றங்கள் வந்த பிறகு அதிக அளவில் பேசப்படுகின்றன

சமீபகாலத்தில் நுகர்வோர் குறைதீர்க்கும் மன்றங்கள் மருத்துவ சேவை குறைபாடு என்றால்இழப்பீடு பல இலட்சங்களில் அனுமதிக்கப்படுகின்றதுஉச்சநீதிமன்றமானது ஒரு தீர்பில் மருத்துவ சேவை குறைபாட்டால் கண் இழந்த குழந்தைக்கு ஏற்படும் வருங்கால இன்னல்களையும் கருத்தில் கொண்டு ஒரு கோடியே 38 இலட்சம் இழப்பீடு வழங்கியுள்ளதுஇவ்வாறான இழப்பீடுகளை மருத்துவத்தொழில் எதிர்நோக்கினால்மேற்கத்திய நாடுகள் மாதிரி தங்கள் மருத்துவ தொழிலை அதிக அளவில் காப்பீடு செய்து நடத்த வேண்டிய நிலைக்க மருத்துவாகள் தள்ளப்படுவார்கள்
.
மற்ற மாநிலங்களை பார்க்கும் போது தமிழகத்தில்மருத்துவர்கள் மீது சேவைகுறைபாடு என்று வழக்கிடும் எண்ணிக்கை மிகவும் குறைவுஅதற்கு  காரணம்  இன்றும் மருத்துவர்கள் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கை.
.ஒரு மருத்துவர் ஒரு அறுவை சிகிச்சை செய்யும்போது அவர் மனதானது அந்தஉயிரை காப்பற்றுவதில் மட்டுமே இருக்க வேண்டும்அதைவிட்டுஅவர் மனதில் ஒரு நொடிப்பொழுது ‘நுகர்வோர் குறைதீர்க்கும் மன்றம்’ வந்து போனாலும்அது நோயாளியின் நலனுக்கு நல்லதாக அமையாது.
.தற்போதுஅரசு மருத்துவமனைகளையும் ‘நுகர்வோர் குறைதீர்க்கும் மன்றங்களின்’ எல்கைக்குள் கொண்டு வந்தாகிவிட்டதுசமீபத்திய உயர்நீதிமன்ற தீர்ப்புகளில்அரசு மருத்துவமனையில் நடந்த மருத்துவ சேவை குறைபாட்டிற்கு   அரசு மருத்துவர்களை நேரடியாக பொறுப்பாக்கி அவர்களையே இழப்பீடு கொடுக்குமாறு ஆணையிட்டுள்ளார்கள்.
.இளையதலைமுறை மருத்துவர்கள்மருத்துவ பட்டப்படிப்பு முடித்தவுடன்   அரசு வேலைக்கு திரும்பாமல் தனியார் மருத்துவமனையை நாடிச்   செல்கின்றார்கள்அரசு மருத்துவர்கள் இவ்வாறு தங்கள் கையில் இருந்து   இழப்பீட்டை செலுத்தும் நிலை வந்தால்இன்னும் கொஞ்ச நாளில் அரசு   மருத்துவமனைகளுக்கு மருத்துவர்கள் கிடைப்பதே அரிதாக இருக்கும்.
.அரசு ஊழியர்கள் அனைவரும் ஒரு சிறு தொகை செலுத்துவதன் மூலம் உடல்நல காப்பீடு பெறுவது போலஇனிமேல் அரசு மருத்துவர்களுக்கும் மருத்துவ தொழில் பாதுகாப்பு காப்பீடு திட்டம் மிக அவசியமானதாகும்அந்த  காப்பீட்டு திட்டத்தை அரசு செயல்படுத்த முன் வரவேண்டும்.
.
மேற்படி குழந்தைக்கு வழங்கியுள்ள இழப்பீடு தீர்ப்பை போலஒரு எழும்பு   முறிவு அறுவை சிகிச்சை செய்தபின்னர் என்னால் முந்தைய மாதிரி நடமாட முடியவில்லை ஆதலால் என் வேலை பார்க்கும் திறன் பாதிக்கபடுகின்றது என்று வாதிட்டு (விபத்து கேஸ்களுக்கு இழப்பீடு கோருவது போல்அதற்கு இழப்பீடு வழங்கப்பட்டால்,  மருத்துவர்கள் பாடு திண்டாட்டம்தான்தனி மருத்துவர் கிளினிக்கை எல்லாம் மூடிவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள்அடுத்தாக மக்கள் கார்ப்பரேட் மருத்துவமைனைக்கு முன்னால், பர்ஸ் நிறைய பணம் வைத்து கொண்டு நின்றாக வேண்டும்.  மத்திய அரசானது தகுந்த சட்ட வடிவை கொண்டு வந்துமருத்துவ சேவை குறைபாட்டிற்கு,   அதிகபட்ச அளவு இழப்பீட்டு தொகையை நிர்ணயம் செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment