வருமான வரி படிவம் 15G/15H பற்றி தெரிந்து கொள்வோம்.
.
வங்கியில் டெபாசிட் வைத்திருக்கும் அனைவருக்கும் வங்கியால் அறிவுறுத்தப்படுபவை
“ சார், பாரம் 15G/15H கொடுத்தால் உங்களது டெபாசிட்டில் இருந்து பெறப்படும் வட்டியில் வருமான வரி பிடித்தம் செய்யபடமாட்டாது”
.
15G எனும் பாரம் 65 வயதிற்கு கீழ் உள்ளவர்களும், 15H என்பது 65 வயது மற்றும் அதற்கு மேல் உள்ளவர்களும் வங்கி டெபாசிட்டில் இருந்து பெறப்படும் வட்டியில், வருமான வரி பிடித்தத்தை தவிர்க்கும் வகையில் டெபாசிட் வைத்திருக்கும் வங்கியிடம் நிதியாண்டு தொடங்கியதும் (ஏப்ரல் மாதத்தில்) வழங்கினால், வழங்கப்படும் வட்டியில் வருமான வரி பிடித்தம் செய்யப்படமாட்டாது. உண்மைதான். ஆனால், வங்கி சொன்னவுடன் இந்த பாரத்தை அனைவரும் நிரப்பி கொடுப்பது சரியா?
.
பதில் “இல்லை“ என்பதாகும்.
.
ஒருவருடைய வருமானம் ரூ.2,50,000 தாண்டாது என்ற நிலையில் உள்ளவர்கள் மட்டுமே மேற்படி பாரத்தை நிரப்பி வங்கியிடம் வழங்க வேண்டும்.
.
மற்றவர்கள் இந்த பாரத்தை நிரப்பி வழங்கினால் வருமான வரி விதி 277ன் படி மூன்று மாதத்தில் இருந்து இரண்டு வருட சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
.
குறிப்பாக, வருமான வரி தொடர்ந்து கட்டி வரும் யவரும் இந்த பாரத்தை நிரப்பி வங்கியிடம் கொடுக்கக்கூடாது.
No comments:
Post a Comment