இன்று பல மருத்துவர்களின் ஆதங்கம் நுகர்வோர் குறைதீர்க்கும் மன்றங்களின் வரம்புக்குள் மருத்துவ சேவை குறைபாட்டை கொண்டு வந்தது தவறான செயல் என்பதாகும். இதனால்தான் இன்று மருத்துவ செலவினங்கள் அதிகரித்துவிட்டதாக அவர்களின் வாதம்.
.
20 வருடங்களுக்கு முன்னர் காய்ச்சல் வந்தால் கஷாயம் வைத்து குடித்துவிட்டு, வீட்டில் ஓரமாக படுத்துவிட்டு, நான்கு நாட்களாகியும் காய்ச்சல் விடவில்லை என்றால் ஊரில் இருக்கு ஒரே ஒரு மருத்துவரிடம் சென்று ஒரு ஊசி போட்டு வருவோம். ஆனால், இன்று மனிதனுக்கு காய்ச்சல் மட்டுமா வருகின்றது? வாழ்வுமுறை, உணவுப்பழக்கங்களில் ஏற்பட்ட மாற்றம் ஆகியவைகளினால் மனிதன் நோய் எதிர்ப்பு சக்தியை இழந்து பல நோய்களின் பிடிகளில் சிக்கி தவிக்கின்றான். அவசர உலகத்தில் ஓடும் மனிதனுக்கு கஷாயம் குடித்து ஓய்வு எடுக்க நேரமில்லை. மாறாக, முதல்நாளே மருத்துவரிடம் சென்று ஊசி போட்டு அன்றே காய்ச்சலில் இருந்து விடுதலை பெற நினைக்கின்றான். விளைவு – மருத்துவத்தை நோக்கி ஓடும் கூட்டம் அதிகமானதும், மருத்துவம் கொஞ்சம் கொஞ்சமாக வியாபரம் ஆனாது.
.
மருத்துவம் வியாபாரம் ஆனபோது, வழக்கம்போல் அனைத்து வியாபரங்களிலும் ஏற்படும் சேவை குறைபாடும் உள்ளே நுழைந்தது. அதற்கு நிவாரணம் கோரி மக்கள் நுகர்வோர் நீதிமன்றங்களை அணுகினார்கள். அடுத்த விளைவு – நோயை கண்டுபிடிப்பதற்கான செலவினங்களும் மருத்துவர்களுக்குமான கட்டணமும் அதிகமானது.
.
இதில் யாரால் மருத்துவ செலவினங்கள் உயர்ந்தன (மருத்துவம் வியாபாரம் ஆனதாலா? அல்லது நுகர்வோர் குறைதீர்க்கும் மன்றங்களாலா?) என்பற்கு விடை தேடுவது என்பது, கோழி முதலில் வந்தததா, குஞ்சு முதலில் வந்ததா என்பதற்கு விடை தேடுவதாகும். ஆகவே, அதில் இருந்து சற்று விலகி நிற்போம்.
.
மருத்து சேவை குறைபாடு ஏற்படும் வகையில் மருத்துவர்கள் நடந்து கொள்கின்றார்களா என்றால், சில நேரங்களில் அதற்கு பதில் “ஆம்“ என்பதாகும். இதற்கு முக்கிய காரணம் மருத்துவர்களுக்கு தாங்கள் சட்டப்படி எதை செய்ய வேண்டும் எதை செய்யக்கூடாது என்ற புரிதல் இல்லாததுதான். சிறப்பு மருத்துவர்கள் தாங்கள் எந்ததுறையில் சிறப்பு படிப்பு படித்திருக்கிறார்களோ அந்த துறையில் மட்டுமே வைத்தியமோ, அறுவை சிகிச்சையே செய்ய வேண்டும். ஆனால், இன்று பொது அறுவை சிகிச்சைக்கு படித்தவர் (எம்.எஸ்) பெண்களின் கர்ப்பபை நீக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கின்றார். (கர்ப்பபை நீக்க அறுவை சிகிச்சை செய்ய மூன்று வருடங்கள் அதெற்கென MD O&G படித்த மருத்துவர்கள் இருக்கினறார்கள்). நீதிமன்றங்கள் தங்களது தீர்ப்பில், இவ்வாறு படிக்காத துறையில் அறுவை சிகிச்சை செய்வதோ அல்லது வைத்தியம் பார்ப்பதோ, “போலி மருத்துவருக்கு“ சமம் என்று விளம்பியுள்ளார்கள்.
.
ஒவ்வொரு மருத்துமனையிலும் நோயாளியை காப்பாற்றும் வகையில் ஓரளவிலான மருத்துவ வசதிகள் மட்டுமே இருக்கும். ஒரு நோயாளிக்கு அந்த மருத்துவமனையில் இருக்கும் மருத்துவ வசதியைவிட அதிக மருத்துவ வசதிகள் தேவைப்பட்டால், உடனடியாக நோயாளியை, நோயாளியின் தேவைக்கேற்ப மருத்துவ வசதியுள்ள வேறு மருத்துவமனைக்கு அனுப்புதல் வேண்டும்.. பல நேரங்களில் மருத்துவர்கள் இவ்வாறு செய்ய தவறிவிடுகின்றார்கள்.
.
இவ்வாறான தவறுகளை செய்யும் மருத்துவர்களின் சேவை குறைபாட்டை தீர்மானிக்கும் வகையில் நுகர்வோர் குறைதீர்க்கும் மன்றங்கள் இருப்பதில் என்ன தவறு?
.
இன்று உச்சநீதிமன்றத்திற்கு மருத்துவ சேவை குறைபாடு என்று எடுத்து செல்லப்பட்டு 1 கோடிக்கு மேல் இழப்பீடு வழங்கப்பட்ட வழக்குகளை நுகர்வோர் குறைதீர்கும் மன்றங்களுக்கு எடுத்து சென்ற முறையீட்டாளர்கள் “மருத்துவர்களே“ என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
.
மருத்துவர்களின் சேவை குறைபாட்டை மற்றொரு மருத்துவரே உறுதி செய்து இழப்பீடு பெறும்போது, ஒரு சாதாரண மனிதனுக்கு ஏற்படும் மருத்துவ சேவை குறைபாட்டிற்கு நுகர்வோர் குறைதீர்க்கும் நீதிமன்றம் செல்வது தவறா?
.
ஒவ்வொரு சட்டம் இயற்றும்போதும் சிலர் பாதிக்கப்படுவார்கள் பலர் நன்மை அடைவார்கள். இந்திய தண்டனை சட்டத்தில் பிரிவு 498 A என்பது ஆண்களுக்கு எதிரான வகையில் பெண்களால் பயன்படுத்தப்படுகின்றது ஒரு கூக்குரல் இன்றும் ஒலித்து கொண்டிருக்கும் வேளையில், அந்த சட்டத்தில் குறிப்பிட்டுள்ள தொல்லைகளை அனுபவிக்கு பெண்களுக்கு அது கேடயமாக இருந்து அவர்களை காப்பாற்றுகின்றது. அதுபோலவே, மருத்துவ சேவை குறைபாட்டிற்கு நுகர்வோர் குறைதீர்க்கும் நீதிமன்றங்கள் கேடயமாக இருந்து நுகர்வோர்களை காக்கின்றது.
.
ஆக, மருத்துவம் வியாபாரம் ஆகிப்போன நிலையில், மருத்துவர்களே மருத்துவர்கள் மீதும் மருத்துவமனைகள் மீதும் வழக்கிட்டு கோடிகளில் இழப்பீடு பெற்று மருத்துவ சேவையில் குறைபாடு உள்ளது என்பதை உறுதி செய்யும் நிலையில்,
.
மருத்துவ சேவை குறைபாடானது நுகர்வோர் குறைதீர்க்கும் மன்றங்களின் வரம்புக்குள் இருக்க வேண்டியது மிக அவசியமானதாகும்.
No comments:
Post a Comment