Pages

Wednesday, 4 May 2016

சினிமா வேறு ..... நிஜம் வேறு.....

சினிமா வேறு ..... நிஜம் வேறு.....
.
.
எனது நண்பரின் மனைவியை பிரசவத்திற்காக நகராட்சி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். பின்னர் அவர்கள் சிசரியேன்தான் பண்ண வேண்டும் என்று கூறி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரை செய்துள்ளார்கள். அரசு தலைமை மருத்துவமைனையில் மனைவியை கொண்டு சென்று சேர்த்தவுடன், எனக்கு போன் பண்ணிமனைவியை அரசு தலைமை மருத்துவமனைக்கு சேர்த்து விட்டேன் சார் ஆனால் ஆபரேஸன் தியேட்டருக்கு உடனே கொண்டு செல்லவில்லை 'என்று வருத்தப்பட்டார்.
.
அவரிடம்சார், சினிமாவில் மட்டும்தான் அனைத்து நேரங்களிலும் நோயாளியை ஆபரேஸன் தியேட்டருக்கு உடனடியாக தள்ளி செல்வார்கள். ஆனால், நிஜத்தில், நோயாளியின் நலன் கருதி சில நடைமுறைகள் பின்பற்றுவார்கள். அதையெல்லாம் சினிமாவில் காட்டினால், நீங்கள் பாதிப்படத்தில் சீட்டைவிட்டு எழுந்து போய்விடுவீரகள். சினிமா வேறு.. நிஜம் வேறு. என்று அவருக்கு சிறிது நடைமுறைகளை எடுத்து சொல்லியதும் சிறிது ரிலாக்ஸ் ஆனார்.
.
சினிமாவில் நடைபெறுவதையே பலர் நிஜம் என்று, இன்றும் நம்பி கொண்டிருக்கின்றார்கள்.


No comments:

Post a Comment