Pages

Monday, 16 May 2016

அரசுடைமை வங்கியில் எனது அனுபவம்

இன்று அரசுடமை வங்கிக்கு சென்றிருந்தேன். வழக்கம் போல, வங்கிப்பணியில் இருந்த கிளார்க்கிடம் “குட்மார்னிங் மேடம்“ என்று கூறினேன்.
.
பதில் – “என்ன வேண்டும்”
(ஒரு வேளை நான் சொன்னது அவருக்கு கேட்கவில்லையோ என நினைத்து....திரும்பவும்)...
.
”குட்மார்னிங் மேடம்”
.
எந்தவித பதிலும் இல்லை.
.
“மேடம், தாங்கள் என்ன படித்திருக்கின்றீர்கள்”
.
”பி.இ” என்று பதில் வந்தது.
.
”மேடம், நீங்கள் செய்யும் வேலையை இன்றைய இளைதலைமுறையினரில், 8-வது படிக்கும் சிறுவன் சிறப்பாகவே செய்வான். பின்னர் ஏன் வங்கியானது “பி.இ” படித்தவர்களுக்கு முன்னுரிமை அளித்து வங்கியில் பணியமர்த்த வேண்டும். அதற்கு காரணம், உங்கடையே Communication Skill சிறப்பாக இருக்கும் என்பதுதான். அதன் பயனாக, வாடிக்கையாளர்களிடம் தன்மையாக உரையாடி, வங்கியின் வியாபாரத்தை உயர்த்துவீர்கள் என்ற நம்பிக்கைதான். ஒரு வாடிக்கையாளர் வந்தால், அவருக்கு வணக்கம் சொல்லி அவர் தேவையை நிறைவேற்ற கடமைப்பட்ட நீங்கள், வாடிக்கையாளர் உங்களுக்கு “குட்மார்னிங்“ சொன்னால்கூட வாடிக்கையாளருக்கு திருப்பி சொல்ல மறுக்கின்றீர்கள். நிச்சயமாக நான் கூறியது மாதிரி 8-வது படித்த ஒரு குழந்தை இங்கு இருந்திருந்தால், நான் சொன்னதிற்கு திரும்ப “குட்மார்னிங்“ சொல்லியிருக்கும் என்றேன்.
.
“சாரி சார்” என்று கூறினார்கள்.
.
(தனியார் வங்கிகள் தனது வாடிக்கையாளருக்கு மரியாதை கொடுக்கும் விதத்திலிருந்து அரசுடைமை வங்கிகள் சற்று கற்று கொள்வது நலம்).
.
.
( ஓவ்வொரு பணிக்கும் போதுமான படிப்புகளை தகுதியாக கொண்டவர்களை மட்டுமே பணியமர்த்துவது என்பது மிக அவசியம். வங்கிகளில் கிளார்க் பணிக்கு பி.இ. படித்தவர்களை பணியமர்த்துவது என்பது அந்த பணிக்கு Over Qualified என்று நான் நினைக்கின்றேன்.)

No comments:

Post a Comment