காசோலை வழங்கும்போது பொதுவாக நாம் பெறுபவரின் பெயர் மட்டுமே எழுதி வழங்குவதை வழக்கமாக வைத்துள்ளோம். கீழ் கண்ட காசோலையை செந்தில்குமார் என்ற பெயருக்கு மட்டுமே எழுதிகொடுத்ததாக வைத்து கொள்வோம். காசோலையை பெற்ற செந்தில்குமார், காசோலையை தவறவிட்டார் என்றால், அந்த காசோலையை எடுத்து யவர் ஒருவர் செந்தில்குமார் எனற பெயரில் வங்கியில் கணக்கு வைத்துள்ளாரோ அவர் கணக்கில் கொண்டு போட்டு பணத்தை எடுத்து கொள்ள வாய்ப்பாக அமையும். (தொலைத்தது செந்தில்குமாருக்கு தெரிந்திருந்தால், அவர் காசோலை வழங்கிய ராமசாமியை தொடர்பு கொண்டு அந்த காசோலைக்கு பணம் வங்கி தருவதை நிறுத்த சொல்லி கட்டளை இடலாம்).
.
ராமசாமி இப்போது டெல்லியில் வசிக்கும் செந்தில்குமார் பெயரில் காசோலை வரைந்து அதை தபாலில் அனுப்பி வைக்கின்றார. காசோலை டெல்லி சேர எப்படியும் நான்கு நாட்கள் ஆகும். இதற்கிடையில் ஏதாகிலும் தவறான வழியில் இந்த காசோலை தப்பான ஒருவரிடம் கிடைத்தால் அவர் செந்தில்குமார் என்ற வங்கி கணக்கில் போட்டு பணம் எடுக்கலாம் அல்லது ஒரு புதுகணக்கு வங்கியை ஏமாற்றி செந்தில்குமார் என்ற பெயரில் ஆரம்பித்து அதில் இந்த காசோலையை இட்டு பணம் எடுக்கலாம்.
.
இதை தவிர்க்கும் விதமாக காசோலை வரையும்போது கீழ் கண்ட படத்தில் உள்ளவாறு செந்தில்குமாரின் வங்கி பெயர், கணக்கு எண்ணை எழுதி காசோலை வரைந்தால், இந்த காசோலையை இந்தியன் வங்கியில் காசோலையில் குறிப்பிட்ட வங்கி எண்ணில் அதுவும் செந்தில்குமார் பெயரில் உள்ள வங்கி கணக்கில் மட்டுமே வசூலிக்கும் வங்கியானது வரவு வைக்கமுடியும். இந்த வகையில் காசோலையானது தவறாக அடுத்தவர் கையில் கிடைத்தாலும் அதை பணமாக்கமுடியாது.
.
மேலும் வங்கி பெயரிட்டு கொடுப்பதால், நாளை செந்தில்குமார் அந்த காசோலையை கொண்டு நான் பணம் பெறவில்லை என்று கூறமுடியாது (பணம் பெறும்போது காசோலை வழங்கியவர் கணக்கில் பணம் கழிக்கப்பட்டாலும் அந்த பணம் யாருக்கு வழங்கப்பட்டது என்ற விபரம் வங்கி கணக்கு புஸ்தகத்தில் பதிவாவதில்லை). இவ்வாறு செந்தில்குமார் மறுத்தால், அவரது இந்தியன் வங்கியில் மட்டுமே அந்த பணம் வரவு வைக்கப்பட்டிருக்கும் என உறுதியாக சொல்லமுடியும்.
.
காசோலை எழுதும்போது கீழ்கண்ட முறையை பாதுகாப்பிற்காக கடைபிடியுங்கள். இந்த முறையில் காசோலையை கிராஸ் பண்ண வேண்டும் என்ற அவசியம் இல்லை. Bearer என்ற வார்த்தையை அடித்துவிட்டால் போதுமானது. இந்த காசோலையை இந்தியன் வங்கி தவிர மற்ற வங்கிகள் பணம் வசூலிக்க முடியாது அதாவது இந்த காசோலையை கணக்கு உள்ள இந்தியன் வங்கியி்ல் மட்டுமே கொடுத்து பணத்தை காசோலை வழங்கியவர் கணக்கில் இருந்து பணம் பெற முடியும்.
No comments:
Post a Comment