Pages

Monday, 16 May 2016

வங்கி ஏடிஎம் - பணம் வருவதில்லை ஆனால் கணக்கில் பணம் கழிக்கப்படுகின்றது

வங்கி ஏடிஎம்-ல் சில நேரங்களில் எடுக்க வேண்டிய பணம் பதிவு செய்தபின், பணம் கைக்கு வருவதில்லை ஆனால் வங்கி கணக்கில் இருந்து பணம் கழிக்கப்படுகின்றது. இதற்கான காரணத்தை முன்னாள் வங்கியாளர் திரு.ப்ளெமிங் டையஸ் அவர்கள் கீழ்கண்டவாறு  பதிவு செய்கின்றார்.

இப்படி கணக்கில் கழிக்கப்பட்ட பின்னரும் பணம் கையில் கிடைக்கவில்லை .... 99 % இது எவ்வாறு நிகழ்கிறது... ? ஓவ்வொரு ATM - லும் நீங்கள் உங்களது atm / debit கார்டை அதற்கூரிய slot - ல் நுழைப்பதிலிருந்து பணம் வெளி வரும் வரை என்ன நடக்கிறது என்பதைப் பார்போம்.கார்டை நுழைத்தவுடன் Language ? கேட்கும்... அடுத்து உங்களது PIN கேட்கும். PIN enter பண்ணினவுடன் கார்ட் நம்பரையும் PIN - ஐயும் பரிசீலித்து சரி எனில் சில பல option கொடுக்கும்.. withdrawal / Fast Cash / Statement / Balance etc..., பணம் எடுத்தல் எனில் நீங்கள் withdrawal - தேர்ந்தெடு.ப்பீர்கள்.... உடனே எவ்வளவு என்று வினா வரும். தொகையினை enter பண்ணினவுடன் அது சரிதானா என்று வினவும். Yes என்று நீங்கள் enter பண்ணினதும் சில விநாடிகளில் பணம் உங்கள் கையில் வரும்.வேறு வங்கி ATM என்றால் type of account - ம் கேட்கும்.... சரி... நீங்கள் கார்ட் வைத்திருக்கும் வங்கியில் ஒரு server இருக்கும். Central Server என்றும் ஒன்று உண்டு.. நீங்கள் PIN enter பண்ணி உங்கள் கணக்கும் கார்டும் tally ஆன வுடன் தொகையை enter பண்ணினவுடன் ATM, Central Server - தொடர்பு கொண்டு இந்த கணக்கில் இவ்வளவு தொகை கேட்கிறார்கள்.. கணக்கில் பணம் இருக்கிறதா ? எனறு வினவும். Central Server Branch Server - தொடர்பு கொண்டு கணக்கை verify பண்ணச் சொல்லி போதுமான பணம் இருப்பின் நீங்கள் கேட்ட தொகையினை debit பண்ண சொல்ல, branch server தொகையினை debit செய்து, செய்தாகி விட்டது... என்று Central Server -க்கு செய்தி அனுப்பும். Central Server ATM- க்கு கேட்ட தொகை debit செய்யப்பட்டு விட்டது, பணம் கொடுக்கலாம் எனறு instruction கொடுக்கும். ATM தனது vault - ல் இருந்து பணம் எடுத்து கொடுக்கும். இவ்வளவு சமாச்சாரமும் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குள் நடக்க வேண்டும் ( say 90 sec ). நம்மில் பலர் PIN நம்பரையோ / எவ்வளவு பணம் எடுக்க வேண்டும் என்பதையோ ATM - ல் நுழைந்து கார்டை insert பண்னின பிறகுதான் யோசிப்போம். குறிப்பிட்ட நேரம் ஓடிக் கொண்டே இருக்கும். கணக்கு debit ஆகி பணம் கொடுக்கலாம் என்று instruction வரும் முன்னர் நேரம் முடிந்து போகும். பணம் வராது... ஆனால் கணக்கு debit ஆகி விடும்... எனவே ATM - ல் பணம் எடுக்க செல்லும் போதே PIN நம்பர், நாம் எடுக்கப்போகும் தொகை இவற்றை தெரிந்து கொண்டு போனால் இந்த மாதிரி தொல்லையை தவிர்க்கலாம்.


No comments:

Post a Comment