வங்கிக்கு சென்றால், கவுண்டரில் உட்கார்ந்து இருப்பவரிடம் “குட்மார்னிங்“ என்று ஒரு புன்சிரிப்புடன் கூறிவிட்டு உங்கள் தேவையை அவரிடம் சொல்லுங்கள்.
.
இன்றைய சூழ்நிலையில் வங்கியாளர்களின் பணி மிக கடினமான ஒன்றாகும். அவர்களின் இறுக்கமான வேலைப்பழுவில், உங்களின் ஒரு காலை வாழ்த்து, அவர்களின் இறுக்கத்தை குறைத்து உங்களுக்கு புன்முறுவலடன் அவர்களின் சேவையை தொடர ஏதுவாக அமையும்.
.
வங்கிகளை பொறுத்தவரை, அனைத்து வாடிக்கையாளரும் ஒன்றே. ஆகவே, வங்கியில் நுழையும்போது, நீங்கள் அந்த வங்கியில் எவ்வளவு பணம் வைத்திருக்கின்றீர்கள் என்ற விபரத்தை சற்று ஒதுக்கிவிட்டு, நீங்கள் அந்த வங்கியின் முக்கியமான வாடிக்கையாளர் என்ற எண்ணம் உங்கள் மனதில் மேலோங்கி இருக்க வேண்டும்.
.
வங்கி வர்த்தகத்தின் சேவையை சிறந்த முறையில் பெற வங்கியின் சேவைகளை பற்றி சட்ட ரீதியாக அனைவரும் அறிந்திருப்பது அவசியமாகும். அதற்கு ஏதுவாக இந்த குழுமம் தொடங்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment