Pages

Monday, 16 May 2016

ஏடிம்-ல் வாடிக்கையாளர் கணக்கில் இருந்து பணம் இருமுறை கழிக்கப்பட்டது

III (2012) CPJ 455 (NC)
.
While withdrawing amount from ATM, machine recorded double entry of withdrawal. Error was brought to the notice of Bank who recredited the amount within 4 days. - — Compensation claimed for Alleged deficiency in service.
.
District Forum allowed complaint — State Commission allowed appeal — Hence revision before National Commission.
.
Mistake was not committed by staff member of Bank but it was happened due to technical defects in ATM machine. Moreover, it cannot be presumed that petitioner had to borrow money by pledging jewels — Compensation not granted.
.
ஏடிம்-ல் பணம் எடுக்கும்போது வாடிக்கையாளர் கணக்கில் இருந்து பணம் இருமுறை கழிக்கப்பட்டது. வாடிக்கையாளர் வங்கியின் கவனத்திற்கு கொண்டு சென்றதும், அவரது கணக்கில் 4 நாட்களுக்குள் பணம் வரவு வைக்கப்பட்டது.
.
வாடிக்கையாளர் தனது கணக்கில் இருந்து இருமுறை பணம் கழிக்கப்பட்டது என்பது சேவை குறைபாடு என மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் மன்றத்தில் முறையிட்டு வெற்றி பெறுகின்றார். பின்னர் வங்கியானது மாநில நுகர்வோர் குறைதீரக்கும் ஆணையத்திடம் மேல்முறையீடு செய்து வெற்றி பெறுகின்றது. வாடிக்கையாளர் மத்திய நுகர்வோர் குறைதீரக்கும் ஆணையத்திடம் சீராய்வு மனு தாக்கல் செய்கின்றார்.
.
.
மத்திய நுகர்வோர் குறைதீரக்கும் ஆணையமனது, நடந்த தவறு வங்கி ஊழியரினால் ஏற்பட்ட தவறல்ல இது முற்றிலுமாக தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏற்பட்டதால், இதற்கு இழப்பீடு வழங்கமுடியாது. மேலும் வாடிக்கையாளர் கணக்கில் இருமுறை பணம் எடுக்கப்பட்டதால், அவரிடம் பணம் இல்லாமல் அவசரத்திற்கு நகையை அடகு வைத்து பணம் எடுத்தார் என்ற வாதமானது மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் மன்றத்தின் ஆணையில் குறிப்பட்டிருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள முடியாது ஏனெனில் முறையீட்டாளர் தனது முறையீட்டில் அவ்வாறான நிகழ்ச்சியை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என்று கூறி மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் மன்றத்தின் ஆணையை தள்ளுபடி செய்தது.
.
எனது குறிப்புவக்கில் நோட்டிஸ் ஆகட்டும், கோர்ட்டுகளில் சமர்பிக்கும் முறையீட்டு மனு ஆகட்டும், அனைத்திலும் நாம் என்ன சொல்ல விரும்புகின்றமோ அதை தெளிவாக சொல்லிவிடவேண்டும். பின்னர் காலம் தாழ்த்தி ஒரு புது கதையை சொல்ல நினைப்பது மேல்முறையீட்டில் முறையீட்டாளர்க்கு பாதகமாக அமையும்.



No comments:

Post a Comment