இந்த சம்பவம் நடந்தது 1980-ல் - மும்பை மாநகரில்....
.
எனது மாமா (அக்காவின் கணவர்) என்னை கூப்பிட்டு “ஒரு காசோலையை கொடுத்து வங்கியில் சென்று பணம் எடுத்து வரச்சொன்னார்“. அவரிடம் நான்...
.
வேறு ஏதாகிலும் வேலை உள்ளதா?...
.
ஆம். இங்கிருந்து 20 கி.மி தொலைவில் உள்ள நரிமன்பாயின்ட் எனும் இடத்தில் சென்று இந்த தபாலை கொடுக்க வேண்டும். ஆனால், அதற்கு நான் போய் கொள்கின்றேன். உனக்கு வழி தெரியாது. ஆகவே, நீ அருகில் இருக்கும் வங்கிக்கு சென்று பணத்தை மட்டும் எடுத்து அக்காவிடம் கொடுத்துவிடு.. என்று கூறினார்.
.
நான் அவரிடம்...“ நான் நரிமன்பாயின்ட் வரை சென்று தபாலை கொடுத்து வருகின்றென். நீங்கள் வங்கியில் சென்று பணத்தை எடுங்கள்... என்று கூறி, 20 கி.மி. தொலைவில் உள்ள இடத்திற்கு அறைகுறை ஹிந்தியை வைத்து வழி கேட்டு சென்று தபாலை சமர்ப்பித்தேன்.
(உண்மையில் எனக்கு அப்போது வங்கி பரிவர்த்தனைகள் ஏதுவும் தெரியாது.. வங்கி என்றாலே ஒரு பயம்.. ஆகவேத்தான், வங்கி வேலையை தள்ளிவிட்டு நரிமன்ட்பாயிண்ட் சென்றேன்)
.
இன்று வங்கிக்கு சென்றால், அனைத்து அலுவலர்களிடமும் ஒரு நட்பை உருவாக்கி, சிறந்த சேவையை அவர்களிடம் இருந்து பெற்று வருகின்றேன்.
.
இன்றும் பலர், வங்கியில் நுழைவதை தவிர்த்தே வருகின்றார்கள். ஒரு டிராப்ட் எடுக்க வேண்டுமானாலும், அதற்கு மற்றவர் உதவியை நாடும் நபர்களை இன்றும் பார்க்கலாம்.
.
பம்பாயில், குஜராத்திகள் கட்டாயம் தங்களது ஒவ்வொரு குழந்தைக்கும் (6-வது வகுப்பில் குழந்தை சென்றதும்) ஒரு வங்கி கணக்கு ஆரம்பித்து, அவர்கள் குழந்தைகளை தொடர்ந்து வங்கி சேவையை பெற ஊக்குவித்து வருவார்கள். இது பின்னர் அவர்கள் பெரியவர்களாகி வியாபாரம் செய்யும்போது, வங்கி சேவையை பற்றி முற்றிலுமாக அறிந்திருப்பார்கள்.
.
நமது குழந்தைகள் எத்தனை பேருக்கு வங்கி கணக்கு ஆரம்பித்து கொடுத்திருப்போம் (இன்ஜினியரிங் காலேஜ் செல்லும் போதுதான் ஒரு வாங்கி கணக்கை ஆரம்பித்து கொடுப்போம். அதுவும் ஏடிம் கார்டுக்காக மட்டும்).
.
ஆகவே, ஒவ்வொருவரும் தங்களது குழந்தையானது 8-வது வகுப்பு வந்ததும், அவர்கள் பெயரில் வங்கி கணக்கு ஆரம்பித்து, அவர்கள் வங்கி பரிவர்த்தனைகளை முற்றிலுமாக அறிய செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment