Pages

Monday, 23 May 2016

அறிவுசார் சொத்துரிமை என்றால் என்ன?

அறிவுசார் சொத்துரிமை என்றால் என்ன?
.
மனித முயற்சியால் உருவாக்கபட்ட படைப்புகள் அனைத்திற்கும் அதை உருவாக்கியவருக்கு உரிமையாளர் என்ற அந்தஸ்த்தை வழங்கு நிலைதான் அற...ிவுசார் சொத்துரிமையாகும்.
.
மற்ற சொத்துக்களை போல ஒருவரின் அறிவுசார் சொத்துக்களை மாற்றம் செய்யலாம், அடைமானம் வைக்கலாம் மேலும் இதற்கு சட்டப்பாதுகாப்பும் உண்டு.
.
வணிக குறிகள், பதிப்புரிமை, புத்தாக்கம், வடிவமைப்புகள், நில இயல் குறியீடுகள் (Trade Mark, Copyright, Patent, Design, Geographical indications) அறிவுசார் சொத்துக்களாக கருதப்படுகின்றது.
.
முகநுால் அல்லது பிளாக்குளில் ஒருவரால் பதியப்படுபவைகளும் இந்த அறிவுசார் சொத்துக்களில் பதிப்புரிமை எனும் பதத்தில் வரும்.
.
பதிப்புரிமைக்கான கருப்பொருள் இலக்கிய, நாடக, இசை மற்றும் கலைத்திறன் படைப்புகளாக இருக்கலாம். திரைப்படங்கள் மற்றும் ஒலிப்பதிவும் இதில் அடங்கும். இலக்கியம் என்பதற்கு குறுகிய அர்த்தம் கொள்ளாமல், ஒருவரால் சொந்தமாக எழுதப்படும் கட்டுரைகளும் இதில் அடங்கும்.
.
ஒருவர் எண்ணத்தில் உள்ளதை ஒரு காகித தாளில் எழுதியவுடன் அதற்கு பதிப்புரிமை வந்துவிடும். அதே சமயத்தில் ஒருவர் உருவாக்கிய பாடலை பாடியதும் அதற்கு பதிப்புரிமை வராது மாறாக அதை அவர் எந்தவகையிலாவது ஒலிப்பதிவு செய்ததும் அதற்கு பதிப்புரிமை வந்துவிடும்.
.
பதிப்புரிமைக்கு சட்ட பாதுகாப்பு பெறுவதற்காக அது முறையாக பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. விருப்பப்பட்டால் பதிவு செய்யலாம். ஒருவர் ஒரு கட்டுரையை எழுதியவுடனெ அவருக்கு அந்த கட்டுரையில் பதிப்புரிமை வந்துவிடுகின்றது.
.
முகநுாலில் பதியப்படும் ஒருவரின் படைப்பிற்கு அதை வெளியிட உட்கிடையான உரிமமானது பதிவு செய்பவரால் முகநுாலுக்கு வழங்கப்படுகின்றது. பதிவை ஷேர் பண்ணுவதா வேண்டாமா என்பதை privacy and application settings சென்று மாற்றி கொள்ளும் வசதி உள்ளது. ஆகவே, ஒருவரின் பதிவை அவரின் நண்பர்கள் முகநுாலில் ஷேர் பண்ணுவதற்கு உரிமமும் பதிவு செய்பவரால் வழங்கப்படுகின்றது.

இதுபோலவே ஒருவர் பிளாக்கில் தன் எண்ணங்களை பதிவு செய்தவுடன் அதற்கு பதிப்புரிமை வந்துவிடுகின்றது.
.
பதிப்புரிமை மீறலின்போது உரிமையில் வழக்கிட்டு இழப்பீடு கோரலாம். மேலும் குற்றவியல் தீர்வுவழியில் பதிப்புரிமை மீறலுக்கு 6 மாதத்திற்கு குறைவில்லாத 3 ஆண்டுகளுக்கு மேற்படாத வகையில் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.அபராதமானது ரூ. 50000க்கு குறைவு இல்லாமல் ரூ.200000 மேற்படாமலும் இருக்கும். பதிப்புரிமை மீறல் தொழில் அல்லது வர்த்தகத்தில் இலாபம் பெறும் நோக்கத்துடன் செய்யப்படாமல் இருப்பின் குறைந்த அளவு தண்டனை 6 மாதத்திற்கு குறைவாகவும் அபராதம் ரூ.50 ஆயிரத்திற்கு குறைவாகவும் இருக்கும்.
குறிப்பு - லா ஜார்னலில் வரும் தீர்ப்புகள் பதிப்புரிமை பெற்றதல்ல ஆனால் அந்த தீர்ப்புகளின் Head Notes பதிப்புரிமை பெற்றதாகும்.

No comments:

Post a Comment