Pages

Monday, 23 May 2016

“FT’ (Facebook Thief)

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 378-ல் குறிப்பிட்டவாறு ஒரு பொருளை மற்றவரிடம் இருந்து எடுப்பது மட்டும்தானா திருட்டு?
.
மற்றவரின் அறிவுசார் சொத்துரிமையை திருடுவதும் தண்டனைக்குரிய குற்றமாகும். பேஸ்புக்கில் ஒருவரால் பதியப்படும் கருத்துக்களை “கட்“ “பேஸ்ட்“ செய்து தனது சொந்த பதிப்புபோல் இட்டு பெருமை கொள்வதும் திருட்டிற்கு சமமே.
.
மற்றவர் பதிப்பை மறுபதிப்பு செய்யும்போது கட்டாயமாக அசல் பதிப்பை எழுதியவரின் பெயரை போடுவது என்பது நாகரிகமான செயலாகவும் மற்றும் சட்டப்படியான செயலாக அமையும். அவ்வாறு இல்லாமல், மற்றவர் பதிப்பை திருடி தங்கள் பதிப்பில் போடுபவர்களை “திருடன்“ என்று அழைப்பதை விட “பேஸ்புக் திருடன்“ என்று அடைமொழி கொடுத்து அழைப்பதுதான் சரியாக இருக்கும். இவ்வாறு திருடி பதிவிடுவர்களின் Comment பகுதியில் “FT’ (Facebook Thief) என்று post செய்வது மிக அவசியமானதாகும்.

No comments:

Post a Comment