Pages

Monday, 16 May 2016

வங்கியாளர் பணி எப்போதும் “Good faith without negligence' என்ற வகையில் செய்யும பணியாகும்

வங்கியாளர் பணி எப்போதும் “Good faith without negligence' என்ற வகையில் பணி செய்யுமாறு அமைந்திருக்கும். இதற்கு அர்த்தம் என்னவெனில், நல்ல எண்ணத்துடன் ஆனால் எந்தவித குறைபாடு இன்றி“ என்பதாகும்.
.
இதை ஒரு உதாரணத்துடன் விளக்கின்றேன். வங்கியில் கவுண்டரில் சென்று உங்கள் கணக்கு எண்னை சொல்லி அதில் உள்ள இருப்பு தொகையை கேட்கின்றீர்கள் என்று வைத்து கொள்வோம்.
.
வங்கி சட்டங்களின் படி, வங்கியாளர் உங்களின் கணக்கில் உள்ள இருப்பு தொகையை பொது இடத்தில் (உங்களை சுற்றி மற்ற வாடிக்கையாளர்கள் இருப்ப...ார்கள்) கூற கடமைபட்டவரல்ல. முறையாக உங்கள் வங்கி கணக்கு புத்தகத்தை நிரப்பி தரவே கடமைபட்டவர். ஆனால், பல நேரங்களில் வங்கியாளர் தங்கள் வாடிக்கையாளர் கேட்கும் மேற்படி கேள்விக்கு பதில் அளிக்கின்றார். இவ்வாறு அவர் கூறும்பொது (கூறுவதே தவறு) அவர் மற்ற வாடிக்கையாளர்கள் யாரும் பக்கத்தில இல்லை என்று உறுதி செய்து கொண்டு கணக்கில் உள்ள இருப்பு தொகையை கூறலாம். இவ்வாறு செயல்பட்டால், வங்கியாளர் நல்ல எண்ணத்துடன் (வாடிக்கையாளருக்கு உதவும் எண்ணத்துடன்) ஆனால் வாடிக்கையாளருக்கு எந்தவித குறைபாடு வராத வகையில் செயல்பட்டவாராவர்..
.
வங்கியாளர் ஒருவர் ஒரு வாடிக்கையாளரிடம் “தங்கள் கணக்கில் 50 இலட்சம் இருப்பு உள்ளது“ என்று கூறுவதை ஒரு கெட்ட எண்ணத்துடன் பக்கத்தில் உள்ள ஒருவர் கேட்டு, அவரை கடத்தி சென்று பணம் தர மிரட்டினால், இங்கு வங்கியாளர் நல்ல எண்ணத்துடன் செயல்பட்டாலும், சேவை குறைபாடுடன் செயல்பட்டார் என்று அவர் தண்டிக்கபடுவார்.
.
வங்கியாளர் பணிபுரியும் போது எப்போதும் Good faith without negligence' என்ற பதத்திற்கு பங்கம் வராமல் செயல்படவேண்டும். இவ்வாறு செயல்படும் நிலையில் வங்கியாளர் இருக்கின்றார் என்பதை வாடிக்கையாளரும் புரிந்து கொள்ள வேண்டும். .
.
அடுத்த முறை வங்கிக்கு சென்றால் உங்கள் வங்கி சேமிப்பு கணக்கு புத்தகத்தை கொண்டு சென்று, அதில் இருப்பு பணத்தை வரவு வைத்து வாருங்கள். எல்லோர் முன்னிலையும் வங்கியாளரிடம் தங்கள் இருப்பு பணத்தை கேட்டு, வங்கியாளர் பணியில் குறைபாடு வராமலும் பார்த்து கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment