மாற்றுமுறை ஆவணச்சட்டம் பிரிவு 138-ன் படி போதுமான பணம் வங்கியில் இல்லை என்று வங்கியாளர் அறிவுறுத்தினால் மட்டுமே காசோலை மோசடி வழக்கு காசோலை வழங்கியவர் மேல் தொடரமுடியும்.
.
ஒருவர் காசோலை வழங்கிய பிறகு, தனது வங்கியிடம் வழங்கிய காசோலைக்கு பணம் கொடுப்பதை நிறுத்த சொல்லி (Stop payment) கட்டளை கொடுத்துள்ளார். காசோலை பெற்றவர் காசோலைக்கான பணத்தை வசூலிக்க வங்கியில் காசோலையை தாக்கல் செய்கின்றார். காசோலையானது வாடிக்கையாளர் உத்திரவுப்படி (stop payment) பணம் வழங்க இயலாது என திருப்பி அனுப்...பி வைக்கின்றது. இப்பொழுது, காசோலை வழங்கியவர் மீது காசோலை மோசடி வழக்கு தொடரமுடியமா?
.
ஆம்.
.
கீழ்கண்ட உச்சநீதிமன்ற தீர்ப்புகளின் படி வழக்கு தொடரலாம்.
It has, however, been held by a Bench of this Court in Electronics Trade and Technology Development Corpn. Ltd., v. Indian Technologists and Engineers (Electronics) (P) Ltd., JT 1996 (1) SC 643 that even if a cheque is dishonoured because of ‘stop payment’ instruction to the bank Section 138 would get attracted“.

இன்னொரு பிரச்சனையில், காசோலைக்கு பணம் கொடுப்பதை நிறுத்த சொல்லி வங்கிக்கு உத்திரவு கொடுத்த காசோலை வழங்கியவர், அதே சமயத்தில் காசோலை யாருக்கு வழங்கப்பட்டதோ அவருக்கு காசோலைக்கான பணத்தை பெறுவதற்காக வங்கியில் காசோலையை தாக்கல் செய்ய வேண்டாம் என்று ஒரு அறிவுப்பு கொடுக்கின்றார். அதன் பிறகும் காசோலை பெற்றவர் பணத்தை பெறுவதற்காக தனது வங்கியில் காசோலையை தாக்கல் செய்ததில், காசோலையானது வாடிக்கையாளர் உத்திரவுப்படி (stop payment) பணம் வழங்க இயலாது என திருப்பி அனுப்பி வைக்கின்றது. இப்பொழுது, காசோலை வழங்கியவர் மீது மோசடி வழக்கு தொடரமுடியமா?
.
Electronics Trade and Technology Development Corpn. Ltd., Secunderabad v. Indian Technologists and Engineers (Electronics) (P) Ltd., JT 1996 (1) SC 643 என்ற வழக்கில், காசோலை வழங்கியவர் காசோலை பெற்றவருக்கு அறிவிப்பு கொடுத்து விட்டதால், காசோலை பெற்றவர் வழக்கிடமுடியாது என்று தீர்ப்பளித்தது.
.
.
M.K. Mukherjee, S.P. Kurdukar & K.T. Thomas, JJ. 2016 1998 (1) MWN (Cr.) 328 CTC என்ற வழக்கில் இவ்வாறு காசோலை வழங்கிய பிறகு ஒவ்வொருவரும் தனது வங்கியிடம் காசோலைக்கு பணம் தருவதை நிறுத்த சொல்லி உத்திரவிட்டால், எந்த நோக்கத்திற்காக பிரிவு 138 உருவாக்கபட்டதோ அதன் நோக்கம் அடிபட்டுவிடும். ஆகவே காசோலைக்கு பணம் கொடுக்கக்கூடாது என நிறுத்த அறிவிப்பு கொடுத்தாலும் காசோலை கொடுத்தவர் மீது காசோலை மோசடி வழக்கு தொடராலம் என உச்சநீதிமன்றம் தீர்பளித்துள்ளது.
.
.
காசோலை வழங்கியவர் கணக்கில் போதுமான பணம் இருந்து, வேறு காரணங்களுக்காக காசோலைக்கான பணம் வழங்குவதை வங்கியில் உத்திரவிட்டு தடுத்து நிறுத்தியிருந்தால், குற்றவியில் நீதிமன்ற நடுவர் காசோலை மோசடி வழக்கில் ஆஜராக சொல்லி சம்மன் அனுப்புவதை மறுக்கலாம் (T.S. Thakur & Gyan Sudha Misra, JJ. 2016 2012 (3) MWN (Cr.) DCC 145).
.
.
ஆக, காசோலை stop payment காரணத்திற்காக திருப்பி அனுப்பப்படும்போது, காசோலை வழங்கிய கணக்கில் காசோலைக்கு வழங்கும் அளவில் போதுமான பணம் இருக்கும் பட்சத்தில், காசோலைக்கு பணம் வழங்குவதை நிறுத்த சொன்ன உத்திரவை நியாயப்படுத்தி வழக்காடலாம்.

No comments:
Post a Comment