இந்தியாவில் கல்வி
முறையில் மாற்றம் வேண்டும்.....
.
சுதந்திரம்
அடைந்து இத்தனை வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் இன்றும் நமது நாட்டில் உள்ள கல்வி
முறையில் 6 மாதத்திற்கு ஒரு முறைதான் தேர்வு என்பதுதான் நடைமுறையில்
உள்ளது.
.
வெளிநாடுகளில்
எப்போது வேண்டுமானலும் (பாடத்திட்டம நிறைவு பெற்ற பிறகு) பணம் கட்டி தேர்வு
எழுதலாம். நமது பல்கலைக்கழகங்களிலும் இந்த நடைமுறையை அமல் படுத்த வேண்டும்.
இவ்வாறான தேர்வுகளைப் பல்கலைக்கழக வளாகத்தில் மட்டும் நடத்த வேண்டும்.
வேண்டுமென்றால் “தட்கால் தேர்வு“ எனப் பெயரிட்டுக் கொள்ளலாம். கட்டணத்தைச் சற்று அதிக அளவில்
வைத்துக் கொள்ளலாம். இந்த முறையில் மாணவர்கள் சீக்கிரமாகப் பட்டப்படிப்பை தேர்ச்சி
பெறுபவதற்கு ஏதுவாக இருக்கும். தேர்வு என்பது மாணவர்களின் அறிவை சோதிப்பதாக இருக்க
வேண்டுமே தவிர ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே சோதிப்பதாக இருக்கக்கூடாது.
(அந்தக் குறிப்பிட்ட காலத்தில் ஏதாகிலும் தவிர்க்க முடியாத காரணத்தினால், ஒரு மாணவனால்
தேர்வு எழுத முடியாமல் போனால் அந்த மாணவன் அடுத்த 6 மாதம் காத்திருக்க வேண்டிய நிலை)
.
மேலும், வெளிநாடுகளில்
தேர்வுக்கான வினாத்தாளை அங்குள்ள வினாத்தாள் வங்கியில் Random
ஆக Lot மூலம் நாமே தேர்வு
செய்து கொள்ளலாம்.
.
இது எப்படி?
.
ஒரு பாடத்தில் 10 பிரிவுகள்
இருக்கின்றது. ஒவ்வொரு பிரிவிலும் 5 உட்பிரிவு இருக்கின்றது என்றால் அங்கு ஒரு வினாத்தாளில் 10 பிரிவுகளின்
உட்பிரிவில் இருந்து கட்டாயம் ஒரு கேள்வி கேட்கப்படும். உட்பிரிவிகளின் வினாக்களை
மாற்றம் செய்து வினாத்தாள் தயார் செய்து வைத்திருக்கப்படும். அந்த 50 வினாத்தாள்களில்
இருந்து ஒரு வினாத்தாளை Lot மூலமாகத் தேர்வு செய்து கொண்டு அதற்கு விடைகள் எழுதி
கொடுத்தால் போதும்.
இந்த முறையில்
வினாத்தாளை நீங்கள் தேர்வு உங்களுக்கு உரிமை அளிக்கப்பட்டிருந்தாலும், முழுப்பாடத்தையும் முறையாகப் படித்திருந்தால் மட்டுமே
தேர்வாக முடியும்
.
நமது
பல்கலைக்கழகத் தேர்வுகளில் பல நேரங்களில் மொத்த பாடத்தில்,
பாதி அளவில்
இருந்து அனைத்து கேள்விகளும் கேட்கபட்டிருக்கும் மீதி பாடத்தில் இருந்து ஒரு
கேள்வி கூட வராது. பெரிய கேள்வியைச் சின்னக் கேள்வியாகக் கேட்டிருப்பார்கள் அல்லது
2 மார்க் எழுதும் நிலையில் உள்ள கேள்வியை 16 மார்க் கேள்வியாகக் கேட்டிருப்பார்கள்.
.
தமிழகத்தில் உள்ள
ஒரு பல்கலைக்கழகத்தில், முதுநிலை பட்டப்படிப்பிற்கு ஒரு பாடத்தில் 10 பகுதிகள் உள்ளன.
தேர்வில் அந்த 10 பகுதியில் ஒவ்வொன்றிலிருந்து ஒரு கேள்வி கேட்கப்படும். தேர்வு அளிப்பவர் 5 கேள்விகளுக்குப்
பதில் எழுத வேண்டும். இந்த முறையில் முதல் 5 பாடங்களை முறையாகப் படித்தாலே போதும் தேர்வில்
தேர்வாகிவிடலாம். (இதுதான் நடக்கின்றது).
.
ஆக, தேர்வு முறையில்
மாற்றம் வேண்டும்.
No comments:
Post a Comment