மும்பையில் 1980 களிலேயே மாத்திரைகளை loose ஆக வாங்க முடியாது. முழு ஸ்டரிப் ஆக மட்டுமே வாங்கமுடியும். தமிழகத்தில்
மருந்து கடையில் தவறான நிலவும் பழக்கத்தால் மருத்துவர் நான்கு நாட்களுக்கு மருந்து
எழுதி கொடுத்தாலும், அதில் குறைந்த எண்ணிக்கை மாத்திரைகளை மட்டுமே வாங்கி உபயோகப்படுத்தும்
வழக்கத்தை நம்மில் பலர் வைத்திருக்கின்றோம்.
.
மருத்துவர்கள் ஒரு நோய்க்கு எழுதும் மாத்திரைகள் ஒரு கோர்ஸ் எனப்படும். அந்த
நோயை முற்றிலுமாக உங்கள் உடம்பில் இருந்து நீக்க மருத்துவர் எழுதிய மருந்துகளை அவர்
குறிப்பிட்ட நாட்களுக்கு கட்டாயம் சாப்பிடவேண்டும். ஆனால், நம்மில் பலர், இரண்டு நாட்கள்
சாப்பிட்டு குணம் சிறிது கிடைத்தவுடன் தொடர்ந்து மருந்து சாப்பிடுவதை விட்டுவிடுகின்றார்கள். அதற்கு தோதுவாக மருந்து கடையில் மருந்து சீட்டை
கொடுக்கும்போது, ஒவ்வொன்றிலும் இரண்டு கொடுங்கள் என்று வாங்கி கொள்வார்கள். குறிப்பாக
ஜலதோஸம் போன்ற நோய்களுக்கு மருத்துவர் எழுதி கொடுக்கும் மருந்துகளை முற்றிலுமாக யாரும்
வாங்குவதில்லை. (இதற்கு இன்னொரு காரணமும் இருக்கின்றது
– மருத்துவர் எழுதிய மருந்து சரியாக வேலை செய்கின்றதா? என்பதை பார்த்துவிட்டு முழு
மாத்திரையும் வாங்கி கொள்ளலாம் என்று ஒரு சிலர் நினைப்பதுண்டு)
.
ஒரு நோயின் தாக்கம் உடம்பில் இருந்து முழுமையாக வெளியேறும் நாட்களை மருத்துவர்
நன்கு அறிந்துதான், குறிப்பிட்ட நாட்கள் மருந்தை சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்துகின்றார்கள்.
அவர்களின் அறிவுரையை கடைபிடிக்க வேண்டியது நமது கடமை.
No comments:
Post a Comment