காசோலை வழங்கியவர் ஒருவர் தான் அந்த காசோலையை தனக்கு சேரவேண்டிய கடனுக்கு அல்லது பொறுப்பு நிலைக்காக அக்காசோலையை பெற்றுக்கொண்டுள்ளார் என்று தானகவே முன் வந்து குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நிருபிப்பது அவசியமா?
இதற்கு பதில் ஆம் என்றால், காசோலை வர்த்தகத்தில் பெறும் பின்னடைவு ஏற்படும் அல்லவா? காசோலை பெற்றவரை காப்பாற்றும் வகையில் மாற்று முறை ஆவணச்சட்டத்தில் பிரிவு 139 ஏற்படுத்தப்பட்டுள்ளது.
.
பிரிவ 139 – முரண்பாடாக எதுவும் மெய்பிக்கபடாதவரை, ஒரு காசேலையை வைத்திருப்பர் அக் காசோலையை தனக்கு வரவேண்டிய கடன் அல்லது பொறுப்பு நிலைக்காக பெற்றுக்கொண்டுள்ளார் என்று காசோலை பெற்றவர் சார்பாக துணிபு செய்யப்படும்
.
இதன்படி காசோலையை தனக்கு வரவேண்டிய கடன் அல்லது பொறுப்பு நிலைக்காக பெற்றுக்கொண்டுள்ளார் என்று காசேலை பெற்றவர் நிருபிக்க தேவையில்லை. ஆனால், “முரண்பாடாக” காசோலை வழங்கியவர் காசோலையை கடன் அல்லது பொறுப்பு நிலைக்காக வழங்கவில்லை என்று நிருபித்துவிட்டால், அதை மறுக்கும் நிலைக்கு காசோலை பெற்றவர் வந்துவிடுவார்.
.
.உதாரணமாக அ விடம் இருந்து ஆ என்பர் 10 இலட்சத்திற்கு காசோலை பெறுகின்றார். பிரிவு 139ன் படி அ என்பவர் அந்த கடனாக கொடுத்துள்ளார் ஆனால் கொடுக்கும் அளவில் அவரிடம் பணம் இருந்த்தா போன்றவைகளை நீதிமன்றத்தில் நிருபிக்க தேவையில்லை. இதற்கிடையில், அ என்பர் தாசில்தார் அலுவலத்தில் வறியவர் என்று ஒரு சான்றதழ் பெற்று அதற்கு அரசிடம் இருந்து ஏதாகிலும் ஒரு உதவி தொகை பெற்று வருகின்றார் என்று அந்த சான்றிதழை ஆ வானவர் நீதிமன்றத்தில் சமர்பித்து, அ-க்கு 5 இலட்சம் பணம் கொடுக்கும் வகையில் அவரிடம் நிதிபற்று இல்லை என்று நிருபித்தால், இப்போது மெய்பிக்கும் சுமையானது அ வின் பக்கம் திரும்பிவிடும். இப்போது அ விடம் 5 இலட்சம் பணம் எவ்வாறு வந்த்து அதை எப்படி ஆ-க்கு கொடுத்தால் யார் முன்னிலையில் கொடுத்தார் போன்றவற்றை நீதிமன்றத்தில் அ-வானவர் நிருபிக்கவில்லை என்றால், காசோலையானது கடன் அல்லது பொறுப்பு நிலைக்காக ஆ-வால் வழங்கப்படவில்லை என்று வழக்கானது நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்படும் நிலைக்கு செல்லும்.
No comments:
Post a Comment