ஒரு காசோலை மோசடி வழக்கில்,
.
அ என்பவர் ஆ-விற்கு ரூ.1,75,000 கடனாக கொடுத்துள்ளார். மூன்று வருடங்கள் கழித்து அந்த கடனிற்காக ஆ-வானவர் அ-விற்கு ரூ.5,00,000 க்கான காசோலை ஒன்றை வழங்குகின்றார். இந்த காசோலையை வசூலிக்க வங்கியில் போடும்போது, ஆ-வின் வங்கியானது மேற்படி காசோலைக்கு ஆ-வானவர் stop payment கொடுத்துள்ளார் என்று அறிவுறுத்துகின்றது. பின்னர் ஆ-வின் மீது ஆ-வானவர் குற்றவியல் நீதிமன்றத்தில் மாற்று முறை ஆவணச்சட்டம் பிரிவு 138ன் படி வழக்கு தொடுக்கின்றார்.
மேற்படி வழக்கில், ஆ கீழ் கண்ட வாதங்களை நீதிமன்றத்தின் முன் வைக்கின்றார்.
1 அ-வின் 3 ஏக்கர் நிலம் ஒன்றை ரூ.10 இலட்சத்திற்கு வாங்குவதற்காக பேசி அ விடம் ரொக்கமாக ரூ.30000 முதலில் கொடுத்து, பகுதி தொகைக்கு ரூ.5 இலட்சத்திற்காக காசோலை ஒன்று கொடுத்து பின்னர் மீதி தெகையை உடனே கொடுத்து நிலத்தை பதிய தயாராக இருக்கும்போது, ஆ-வானவர் நிலத்தை பதிவு செய்ய மறுத்து வந்ததால், கொடுத்த காசோலைக்கு வங்கியானது பணம் கொடுப்பதை தடுக்கும் விதமாக வங்கியிடம் stop payment அறிவுறுத்தப்பட்டது. மேலும் அந்த காசோலைக்கு பணம் கொடுக்கும் வகையில் சட்டப்பொறுப்பு ஒன்றும் ஏற்படவில்லை.
குற்றவியல் நீதிமன்றமானது அ - முறையீட்டாளர் காசோலை வழங்கியவர் சட்டபொறுப்பிற்காக வழங்கினார் என்பதை நிருபிக்க தவறிவிட்டார் என வழக்கை தள்ளுபடி செய்தது. வழக்கு உயர்நீதிமன்றத்திற்கு எடுத்த செல்லப்பட்டதில், ஆ வானவர் அ விற்கு வட்டியுடன் சேர்த்து ரூ 8.5 இலட்சம் 8 வாரத்திற்குள் வழங்கவேண்டும் தவறும் பட்சத்தில் ஆறுமாத சிறைத்தண்டனை என்று தீர்ப்பளிக்கின்றது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திற்கு ஆ வழக்கை மேல்முறையீட்டிற்கு கொண்டு செல்கின்றார்.
.
உச்சநீதிமன்றம் கீழ் கண்ட விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றது.
.
1. அ-வானவர் மாதம் ரூ.2500 சம்பளத்திலும் தின பாட்டாவாக ரூ.20 பெற்று வருகின்றார்.
2. அ-வானவர் ஆ-க்குரொக்கமாக ரூ.1.75 இலட்சம் கொடுத்தற்கு போதுமான ஆதாரம் இல்லை.
3. அ கொடுத்த கடன் ரூ.1.75 இலட்சம் எப்படி மூன்று வருடங்களில் 5 இலட்சமாக மாறியது என்பதற்காக விபரம் இல்லை.
4. அ-வின் வருடாந்திரசேமிப்புரூ.10 ஆயிரம்இருக்கும்பொது, அவர்ரூ.1.75 இலட்சம்ரொக்கமாககொடுத்ததைஏற்றுக்கொள்ளும்வகையில்இல்லை.
5. ஆ-வானவர் காசோலையை நில விற்பனை ஒப்பந்தத்தின்அடிப்படையில் வழங்கினார் என்பதற்கு தகுந்த சாட்சியத்தை அளித்துள்ளார். அந்த நில ஒப்பந்தமானது ஒரு வழக்கறிஞர் முன்னிலையில் நடைபெற்று உள்ளது.
மேற்படி காரணங்களின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை இரத்து செய்து குற்றவியல் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்த்து.
குறிப்பு – காசோலை மோசடி வழக்கிடுபவர், காசோலையானது சட்டப்பொறுப்பிற்காக வழங்கப்பட்டதை நிருபிக்கும் நிலையில் இருக்கின்றார்.
No comments:
Post a Comment