இன்று பெரும்பாலான இளைதலைமுறையினரின் கனவு IAS IPS ஆகுவதுதான்.
.
சென்னையிலும் மற்றும் புறநகர்களிலும் புற்றீசல்கள் போல் பல IAS தேர்வுக்கான மையங்கள் உள்ளன. இவை அனைத்தும் முறையாக வழிகாட்டுகின்றதா?
.
எனது நண்பர், தனது குழந்தையை மேற்படி கனவோடு சென்னையில் உள்ள ஒரு மையத்தில் சேர்த்துவிட்டார். சேர்ப்பதற்கு முன் அந்த மையத்தில் சென்று அந்த மையத்தில் பாடம் எடுப்பதை பற்றி ஏற்கனவே சேர்ந்துள்ளவர்களை விசாரித்ததில், அனைவரும் சிறப்பாக பாடம் எடுப்பதாக கூறியுள்ளார்கள். அதற்காக அந்த மையத்தின் அருகில் ஒரு வீடு எடுத்து தன் பெண்ணை தங்க வைத்தார்.
.
ஆரம்பித்த ஒரு வாரம் அந்த பெண் எனது நண்பரிடம “சூப்பர்ப்பா....என்னமா கிளாஸ் எடுகின்றார்கள்“ என அந்த மையத்தை பற்றி புகழ்ந்து தள்ளினார். எனது நண்பருக்கும் மிக மகிழ்ச்சி. நமது குழந்தை IAS ஆகிவிடும் என்று.
.
ஒரு மாதம் கழித்து எனது நண்பர் அவரது பெண்ணிடம் “என்னடா, கிளாஸ் எப்படி போகின்றது“ என்று கேட்டதற்கு ” அப்பா, முதலில் நன்றாக எடுத்தார்கள். இப்போது வந்து பாடம் எடுப்பவர்கள் சரியாக எடுப்பதில்லை – இந்த கிளாஸக்கு செல்வது வேஸ்ட் என்பதால் நான் வீட்டில் இருந்தே படிக்கின்றேன்” என்று கூறியுள்ளார்.
.
உண்மையில் அந்த பெண் படித்த மையத்தில் நடந்தது என்ன? அந்த மையத்தில் ஒருவர், ஒரு பாடத்தை வெகு சிறப்பாக நடத்துவார். தமிழகத்தில் உள்ள மேற்படி மையங்களில் அவர் நடத்துவது போல் அந்த பாடத்தை யாராலும் நடத்த முடியாது. அட்மிஸன் ஆரம்பித்த உடன் அவர் அந்த பாடத்தை நடத்துவதால், அவர் பாடம் நடத்தும் விதத்தை பார்த்து புது அட்மிஸன் குவிந்துவிடும். பின்னர் அவ்வளவுதான்.
.
இதுபோன்றே ஒவ்வொரு மையத்திலும் ஒரு பாடத்தை அல்லது சில பாடங்களை மட்டுமே சிறப்பாக எடுக்கும் வகையில் ஆட்கள் இருக்கின்றாரகள்.
.
ஒரு வருடம் கழித்து நண்பரின் பெண், அவரது கனவை சற்று தள்ளி வைத்துவிட்டு முதுநிலை படிப்பிற்காக திரும்பு ஊர் வந்து சேர்ந்தார். அந்த பெண்ணின் ஆதங்கம் என்னவெனில் சேர்ந்த ஒரு மாதத்தில், அந்த தேர்வை பற்றிய முழு விபரத்தை கூட முறையாக சொல்லி கொடுக்கவில்லை என்பதுதான். அனைத்தையும் ஏற்கனவே இதைப்பற்றி தெரிந்தவர்களிடமே கேட்டு தெரிந்து கொள்ளும் நிலைதான் என்று வருத்தப்பட்டார்.
.
இந்த மையங்களில் அதிகம் சென்று பணத்தை இழப்பது, கிராமங்களில் இருந்து செல்பவர்களே.
.
எனது நண்பருக்கு ஏற்பட்ட அனுபவத்தை தங்களிடம் பகிர்ந்துள்ளேன். இதற்கு சில மையங்கள் பல மையங்கள் கூட விதிவிலக்காக அமையலாம்.
.
எனக்கு தெரிந்தவரையில் இந்த தேர்வை எதிர்கொள்ள நினைப்பவர்கள், குறைந்த பட்சம் இளநிலை படிப்பின் இறுதியாண்டில், இந்த படிப்பை பற்றி ஒரு ஹோம் ஒர்க் பண்ணுவது சிறந்த்து. யாராவது என்னிடம் நான் IAS ஆக போகின்றேன் என்று கூறினால் நான் முதலில் அவர்களிடம் கேட்பது “ தேர்வு முறைகள் என்ன?“ என்பதுதான். அவர்கள் தெரியாத என்று கூறினால் ” முதலில் தேர்வு முறைகளையும், பாடங்களையும், அதில் உங்களுக்கு விருப்பமான பாடங்களையும் ஏற்கனவே இதற்காக தயார் செய்து கொண்டிருக்கும் ஒருவரை சந்தித்து தெரிந்து கொள்ளுங்கள்” என்று அறிவுரை கூறுவேன்.
.
இந்த தேர்வில் தேர்வாதற்கு என்று ஒரு strategy (தந்திரம்) உள்ளது. அதை கற்றுக் கொள்பவர்கள் மட்டுமே இதில் தேர்வாக முடியும். அதை சிலர் குறுகிய காலத்தில் கற்று கொள்வார்கள் சிலர் அதிக attempt எடுத்து கற்று கொள்வாரகள். அந்த தந்திரத்தை அறி்ந்து கொள்ள வேண்டும என்றால், இதற்காக தேர்வு செய்பவர்களையும், தேர்வு ஆனவர்களையும் நேரடியாக சந்தித்து அவர்களின் Strategy பற்றி அறிந்து அதில் இருந்து தனக்கென வசதியாக உள்ள ஒரு Strategy உருவாக்கி வெற்றி கொள்ள வேண்டும்.
.
இந்த தேர்வில் முதல் முறையில் ஒருவர் தேர்வானால், அதற்கு அர்த்தம் இந்த தேர்வுக்காக அவர் தனது இளநிலை பட்டப்படிப்பு காலத்தில் இருந்தே தயார் செய்து வருகின்றார் என்பதாகும்.
.
நான் கேட்ட வரை, தினமும் குறைந்தது 8 மணி நேரமாவது இந்த படிப்பிற்காக ஒருவர் ஓதுக்கி படிக்க வேண்டும். இது எல்லாம் சாத்தியப்படாது என்று நினைப்பவர்கள், அவர்களது மேற்கல்வியை தொடர்வதுதான் சிறந்தது. ஏனெனில் தொடர் முயற்சியும் விடா முயற்சியும் இல்லை என்பவர்கள் இதை தொடர்ந்தால், வருடங்கள் ஒடிவிடும். பின்னர் அவர் இளநிலை பட்டப்படிப்போடுதான் காலம் தள்ள வேண்டும்.
.
இந்த தேர்வு முறைக்கு தயாராகும்முன்னர் முதலில் இந்த தேர்வுக்கான அனைத்து விஸயங்களையும் அறிந்து, நாம் இந்த தேர்வை எதிர்கொள்ளும் வகையில் அல்லது எதிர்கொள்ள தயார் செய்யும் வகையில் நம்மால் முடியுமா என்று சுயபரிசோதனை செய்து கொள்ளவும்.
இந்த தேர்வு சம்பந்தமாக, தமிழ் மாணவர்களுக்கு வழிகாட்டியாக நமது முகநுால் நண்பர் இளம் பகவத் அருமையான ஒரு பதிப்பை இட்டுள்ளார். மாணவர்கள் மட்டும் அல்லாது, அனைத்து பெற்றோர்களும் இந்த பதிவை படிக்குமாறு உங்களை கேட்டுக்கொள்கின்றேன்.
https://www.facebook.com/Elambahavath/posts/1183859161647026
.
No comments:
Post a Comment