காசேலைக்கு பணம் அளிக்கும் முன் காசோலை பெறும் வங்கியாளர் கீழ்கண்டவற்றை உறுதிபடுத்தி கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் “சேவை குறைபாடு“ எனும் பதத்தில் அவரின் சேவை அமையும்.
.
1. காசோலை தனது வங்கியில் வரையப்பட்டிருக்கின்றதா (தனது வங்கிக்கிளையின் காசோலைதானா?)
2. காசோலையின் எண் வங்கி வாடிக்கையளருக்கு வழங்கப்பட்ட காசோலைகளின் எண்னை சார்ந்ததுதானா?
3. காசோலை குறுக்கு கோடு இடப்பட்டிருக்கின்றதா? ஆம் என்றால் அந்த காசோலை வங்கி கணக்கில் வரவு வைக்கும் வகையில் பெறப்பட்டுள்ளதா?
4. காசோலையானது Account Payee என்று குறுக்குகோட்டிற்குள் எழுதப்பட்டிருந்தால், Payee பெயரில்தான் வரவு வைக்கப்படுகின்றதா? (இது தனது வங்கியில் வரவு வைக்கும்போது மட்டுமே உறுதிப்படுத்த முடியும்.)
5. காசோலையானது Bank Name குறுக்குகோட்டிற்குள் எழுதப்பட்டிருந்தால், குறிப்பிடப்பட்ட வங்கிதான் வசூலுக்க காசோலையை அனுப்பி வைத்துள்ளதா?
6. காசோலையில் உள்ள Bearer எனும் வார்த்தை அடிக்கப்பட்டிருக்கின்றதா? ஆம் என்றால், அந்த காசோலை வங்கி கணக்கில் வரவு வைக்கும் வகையில் பெறப்பட்டுள்ளதா?
7. காசோலையில் தேதி முறையாக இடப்பட்டுள்ளதா?
8. காசோலையின் பெறப்பட்ட நாளானது, அந்த காசோலையில் இட்ட தேதியிலிருந்து 3 மாதத்திற்குள் அமைந்துள்ளதா?
9. காசோலை கிழிந்தோ, அடித்தலோ இல்லாமல் இருக்கின்றதா?
10. காசோலையில் எண்ணால் குறிப்பிட்ட தொகையும் எழுத்தால் குறிப்பிட்ட தொகையும் சம்மாக இருக்கின்றதா?
11. காசோலையில் எதாகிலும் திருத்தம் இருந்தால், காசோலை வரைந்தவரின் (வாடிக்கையாளரின்) முழு கையொப்பம் தெளிவாக அருகில் இடப்பட்டிருகின்றதா?
12. Payee Name தெளிவான முறையில் சந்தேகத்திற்கு இடமின்றி எழுதப்பட்டிருக்கின்றதா?
13. வரைந்தவரின் கையொப்பம், வங்கியில் உள்ள “மாதிரி“ கையொப்பத்துடன் முற்றிலும் ஒத்து போகின்றதா?
14. வாடிக்கையளரின் கணக்கில் இருந்து பணம் அளிக்கக்கூடாத வகையில் எதாகிலும் தடை உள்ளதா? (நீதிமன்ற ஆணை அல்லது வருமான வரி கார்னிஷி ஆணை)
15. வாடிக்கையாளர் அந்த காசோலைக்கு பணம் அளிக்கக்கூடாது என்று அளித்த (Stop Payment) உத்திரவு நிலுவையில் உள்ளதா?
16. வாடிக்கையாளர் தற்போது உயிரோடு இல்லை, மனநிலை பாதித்த நிலையில் உள்ளார் போன்ற விபரம் வங்கியின் கவனத்திற்கு வந்துள்ளதா?
17. காசோலையானது மேலெழுத்து (endorsement) செய்யப்பட்டிருந்தால், முறையாக மேலெழுத்து செய்யப்பட்டிருக்கின்றதா?
18. காசோலை Bearer காசோலையாக இருந்து, அதில் மிக அதிகமாக தொகை எழுதப்பட்டிருந்தால், பணத்தை வழங்குமுன் வாடிக்கையளிரடம் ஒப்புதல் பெறப்பட்டதா? (சட்டப்படி அவசியமில்லை. ஆனால் வாடிக்கையாளரின் நலன் கருதி வங்கியாளர் செய்வது அவசியம். மேலும் காசோலை கொண்டு வருபவரும், Payee ஒருவரே என உறுதி செய்யப்படவேண்டும்)
No comments:
Post a Comment