காலதாமதம் இன்றி மருத்துவரை பார்க்க செல்லுங்கள்.
.
ஏதாகிலும் மருத்துவ பிரச்சனை என்றால், உடனடியாக மருத்துவரை பார்க்க செல்லுங்கள்.
.
பாட்டி வைத்தியம் தாத்தா வைத்தியம் கூகுள் வைத்தியம், சொந்தகாரர்கள் வைத்தியம், சொந்த வைத்தியம் அனைத்தையும் முடித்துவிட்டு, இரவு நேரத்தில் மருத்துவரின் வீட்டின் கதவை தட்டாதீர்கள்.
.
மருத்துவரும் மனிதர்தான். அவரும் மற்றவரைப்போல இரவில் ஓய்வு எடுத்தால்தான், நாளை அவரை நாடி வரும் நோயாளிகளுக்கு வைத்தியம் பார்க்க முடியும்.
.
மருத்துவரை இரவில் தொந்திரவு படுத்துவது ஒரு புறம் இருக்க, இரவு நேரத்தில் அனைத்து துறைச்சார்ந்த மருத்துவர்களின் உதவிகளும் கிடைப்பது கடினமான ஒன்றாகும்.
.
உதாரணமாக, ஒரு பெண்ணிற்கு காலையிலேயே பிரசவலி ஆரம்பித்திருக்கும். ஆனால் அப்போதே மகப்போறு மருத்துவரை அணுகாமல், நன்றாக வலி வரட்டும் (வீட்டில் உள்ளவர்களின் ஆலோசனை – நன்றாக வலி வந்தால்தான் குழந்தை நார்மலாக பிறக்கும் – இல்லையேல் மருத்துவர் சிச்ரியேன் செய்துவிடுவார்) என்று வீட்டில் பகல் முழுவதும் இருந்துவிட்டு, இரவு 2 மணிக்கு மகப்பேறு மருத்துவரின் வீட்டு கதவை தட்டுவார்கள்.
.
இரவு நேரத்தில் அவர்கள் எதிர்பார்ப்பு பொய்யாகி, சிசரியேன் பண்ண வேண்டிய நிலை வந்தால், அங்கு உடனடி தேவை ஒரு மயக்கவியல் மருத்துவர் மற்றும் . குழந்தையின் நலனுக்காக குழந்தைநல சிறப்பு மருத்துவர் .
.
சிசரியேன் பண்ணும்போது எதிர்பாராத விதமாக அதிக அளவு இரத்த போக்கு ஏற்பட்டால், ஒரு பொது அறுவை சிகிச்சை மருத்துவரின் உதவி தேவை. நடைபெறும் அறுவை சிகிச்சையில் எதிர்பாராதவிதமாக சிறுநீரக பாதைக்கான இடத்தில் கவனம் தேவை என்றால் சீறுநீரக சிறப்பு அறுவை சிகிச்சை மருத்துவரின் தேவை. இதைத்தவிர நோயாளிக்கு உடல்நிலை வேறுவகையில் மோசமானால், பொது மருத்துவத்தில் சிறப்பு மருத்துவர் தேவை. இத்தனை மருத்துவர்களையும் இரவில் வரவழைப்பது கடினம்.
.
ஆகவே, நோயாளியின் உடல்நலம் கருதி, மருத்துவமனைக்கு செல்வதை தாமதப்படுத்தி இரவு நேரங்களில் மருத்துவமனைக்கு செல்வதை தவிர்ங்கள். அதிலும் குறிப்பாக இரவு 3 மணிக்கு 4 மணிக்கு ஜோஸ்யர் சொன்னார் “பிறக்கும் குழந்தை அரசாளுவான்“ என்று நல்ல நேரத்தை குறித்து கொண்டு, இரவு நேரத்தில் சிசரியேன் செய்ய சொல்லி மகப்பேறு மருத்துவர்களை நிர்பந்தப்படுத்தாதீர்கள்.
.
இவ்வாறு செய்யும்போது உங்கள் உறவினர்களின் உயிர்களை நீங்களே, தானே முன் வந்து ஆபத்தில் சிக்க வைக்கின்றீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment