சாப்ட்வேர் துறையில் வேலை பார்க்கும் நபர்கள் பிரசவத்திற்காக தன் மனைவியை இன்று அரசு மருத்துவமனைகளில் சேர்க்கின்றார்கள். அங்குதான் தேவையில்லாமல் சிசரியேன் பண்ணமாட்டர்கள் என்ற காரணமாக கூறுகின்றார்கள். அவர்கள் விருப்ப்ப்பட்ட மாதிரியே, நல்லபடியாக குழந்தை பிறந்து தாயும் சேயும் நலமாக வீடு திரும்பிய பிறகு, சிறப்பாக சிகிச்சை அளித்த அரசு மருத்துவமனையை பற்றி முகநாலில் ஒரு பதிவு இடுவார்களா என்றால் பதில் இல்லை என்பதாகும். காரணம் – மென்பொருள் துறையில் பணிபுரியும் அவரது மனைவி அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்றார் என்றால் அவரது மதிப்பு குறைந்துவிடும். இதில் கொடுமை என்னவென்றால், இவர்கள் முழு இன்சூரன்ஸ் வைத்திருப்பார்கள். அதை வைத்து கார்ப்பரேட் மருத்துவமனைகளில் வைத்தியம் பார்க்கலாம். ஆனால் செய்யமாட்டார்கள். அரசு மருத்துவமனையில் இலவசமாக வைத்தியம் பெற்ற பிறகு அதை பாரட்டவும் மாட்டார்கள்.
.
அரசு மருத்தவமனைகளில் வைத்தியம் பெற குடும்ப ஊதிய தகுதி ஒன்றும் இல்லை. யார் வேண்டுமானாலும் வைத்தியம் பெறலாம் (இதுதான் இன்று அரசு மருத்துவமனைகளில் கூட்டத்திற்கும், உண்மையிலேயே வசதி இல்லாதவர்களுக்கு வைத்தியம் கிடைப்பதில் ஏற்படும் சுனக்கத்திற்கும் காரணம்) இவ்வாறு மென்பொருள் துறையில் இருந்து வந்து வைத்தியம் பார்த்து செல்லும் நபர்கள், வைத்தியம் பார்த்து முடித்து செல்லும்போது, மருத்துவமனையின் உபயோகத்திற்காக நான்கு ட்யுப்லைட்டாக வாங்கி கொடுத்து செல்ல்லாம் (அவ்வாறு கொடுத்தால் மருத்துவமனை அதற்கென தனி புத்தகத்தில் பதிவு செய்து பெற்று கொள்வார்கள்). ஆனால், அதுவும் செய்வது கிடையாது. அவர் குழந்தை அரசு மருத்துவமனையில் பிறந்திருந்தாலும், முகநாலில் அவரும் அரசு மருத்துவமனை சேவையின் குறைகளை (அதாவது அவர் மனைவியை சேர்திருக்கும்போது அவர் கண்ட குறைகளை) எழுதி “லைக்“ வாங்கி கொள்வார்.
No comments:
Post a Comment