Pages

Wednesday, 6 July 2016

நோயாளிகளிகளிடம் இருந்து ம் ஒரு மருத்துவரின் எதிர்பார்ப்பு

நோயாளிகளிகளிடம் இருந்தும் அவரது உறவினர்களிடம் இருந்தும் ஒரு மருத்துவரின் எதிர்பார்ப்பு

1.   மருத்துவமனைக்கு வரும்போது அவசியம் பழைய மருத்துவ ஆவணங்களை கொண்டு வாருங்கள். ஆனால், முன்னர் வைத்தியம் பார்த்த மருத்துவரின் ஆலோசனைகளை கொண்டு வராதீர்கள். அவரைவிட நான் சிறந்தவன் அல்ல.
.
2.   கோயில்களிலும் சர்ச்களிலும் காத்திருக்கும் நீங்கள்,  மருத்துவமனையில் உங்கள் முறை வரும் வரை வரிசையில் காத்திருங்கள். மிகவும் மோசமான நிலையில் உள்ள நோயாளியையும், முதியவர்களுக்கும்  மற்றும் குழந்தைகளைக்கும் முன்னுரிமை கொடுத்து பார்க்க தயாராக இருக்கின்றேன்.
.
3.   நான் தங்களுக்கு கொடுத்திருக்கும் எனது போன் எண்ணானது உங்கள் எமர்ஜென்சி நேரத்தில் என்னை தொடர்பு கொள்ளவதற்காக கொடுக்கப்பட்டதாகும். ஒவ்வொரு முறை மருத்துவமனைக்கு வர நினைக்கும்போதும் அதில் தொடர்பு கொள்ளாதீர்கள். எனது மருத்துவமனையில் ரிஷப்ஷனிஸ்ட் இருக்கின்றார். அவரை தொடர்பு கொண்டு உங்களை வருகையை பதிவு செய்யவும். தொடர்ந்து உங்கள் வருகைக்காக என்னை தொடர்பு கொண்டால், பாவம், எனது ரிஷப்ஷனிஸ்டுக்கு வேலை இல்லாமல் ஆகிவிடும்.
.
4.   என்னை ஒரு திருமண வைபவத்திலோ அல்லது ஒரு பிறந்தநாள் நிகழ்ச்சியிலோ சந்தித்தால் என்னை வாழ்த்துவதை மனமார ஏற்றுக்கொள்கின்றேன். ஆனால் தயவு செய்து அங்கு வைத்து உங்கள் உடல்நலத்தை பற்றி என்னிடம் பேசாதீர்கள்.
.
5.   நான் உங்கள் காப்பாற்றி விட்டேன் என்று என்னை புகழாதீர்கள். நான் எனது கடமையை செய்தேன். உங்களை குணமாக்கியது கடவுளின் செயல். அதுபோலவே, உங்களுக்கு வைத்தியத்தில் பிரச்சனைகள் வந்தால், என்னை மீறியும் ஒரு சக்தி இருப்பதை உணருங்கள். நமது உடம்பிற்கு இன்று ஒத்துபோனது நாளை ஒத்துபோகாது. ஆகவே, எதற்கொடுத்தாலும் மருத்துவரை குறை சொல்வதை தவிர்ங்கள்.
.
6.   எனது வைத்தியத்தில் உங்களுக்கு திருப்தி ஏற்படவில்லை என்றால் என் சகோதர சகோதரி மருத்துவர்களிடம் செல்லுங்கள்.
.
7.   எனது வைத்தியத்தில் பிரச்சனை ஏற்பட்டால், அதற்கு சட்டப்படியான நிவாரணம் அளிக்கும் வகையில் உள்ள மெடிக்கல் கவுன்சில் மற்றும் நுகர்வோர் குறை தீர்க்கும் மன்றத்திற்கு உங்கள் குறையை எடுத்து செல்லுங்கள் மாறாக வாட்ஸ்ஆப் அல்லது முகநாலில் அதை எழுதாதீர்கள். நானும் உங்களை போன்று ஒரு மனிதன்தான்.
.
8.   எனது மருத்துவ அறிவுரையை முற்றிலுமாக எடுத்து கொள்ளுங்கள். இன்டெர்நெட் பார்த்து அதன்படி வைத்தியம் செய்ய முயற்சிக்காதீர்கள். என் கம்யுட்டரை பார்த்து நான் உங்களுக்கு வைத்தியம் செய்வதில்லை.

9.   வரும்போதே உங்கள் அனைத்து கேள்விகளை கேட்கும் வகையில் தயாராக வாருங்கள். தேவைப்பட்டால் எழுதி எடுத்து வாருங்கள். நான் உங்கள் அனைத்து கேள்விக்கும் விடை அளிக்க தயாரக இருக்கின்றேன். எனது அறையில் வந்து யோசித்து யோசித்து கேள்விகளை எழுப்பி, உங்களுக்கு பின்னர் காத்திருக்கும் நோயாளியின் நேரத்தை வீணடிக்காதீர்கள்.
.
10. எனது அறையில் வைத்து மொபைல் போசாதீர்கள். அதை சைலன்ட் நிலையில் வைத்துவிட்டு என்னை சந்தியுங்கள். நான் தங்களுக்கு வழங்கும் மருத்துவ அறிவுரையை எந்தவித இடைஞ்சல் இல்லாமல் முழுமையாக தாங்கள் அறிந்து கொள்ள தங்கள் மொபைல் போன் அமைதியாக இருப்பது மிக உபயோகமாக இருக்கும்.
.
11. நான் மருத்துவர் என்று அழைக்க்படுவதற்கு காரணமே நீங்கள்தான். எனது அறையில் தாங்கள் இருக்கும்போது தாங்கள் ஒரு நோயாளி மட்டுமே – தாங்கள் ஒரு அதிகாரியோ அல்லது அமைச்சரோ அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
.

12. முடிவாக, நான் மருத்துவர் ஆனாலும் நானும் உங்களை போன்ற மனிதன்தான் என்பதையும், தங்களுக்கு  இருக்கும் அனைத்து கடமைகளும் பொறுப்புகளும் எனக்கு இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள. 

No comments:

Post a Comment