கீழ் கண்டவை காசோலை மோசடி வழக்கில், காசோலை வழங்கியவர் எடுக்கும் எதிர்வாதங்களாக அமையலாம்.
.
1. காசோலையானது சட்டப்படியான கடப்பாட்டிற்காக வழங்கப்படவில்லை (உதாரணமாக – காசோலையானது தானமாக வழங்கப்பட்டது)
.
2. காசோலையானது காசோலை தேதியிட்ட தேதியில் இருந்து மூன்று மாதங்களுக்குள் வசூலுக்காக தாக்கல் செய்யப்படவில்லை.
.
3. காசோலை திரும்பி வந்த 30 நாட்களுக்குள் பணத்தை வழங்குமாறு காசோலை வழங்கியவருக்கு சட்டப்படியான அறிவிப்பு வழங்கப்படவில்லை.
.
4. காசோலையில் குறிப்படப்பட்ட தொகைக்கு அதிகமாக சட்டப்படியான அறிவிப்பில் தொகை குறிப்பிடப்பட்டுள்ளது
.
5. காசோலை வழங்கிய நபர்கள் முறையாக வழக்கில் எதிர்மனுதார்களாக சேர்க்கப்படவில்லை
.
6. காசோலையானது, மிரட்டி அல்லது தகாத செல்வாக்கை உபயோகித்து பெறப்பட்டாதாகும்.
.
7. காசோலையானது வங்கியாளரின் தவறால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது
.
8. சட்டப்படியான அறிவிப்பு கொடுத்த பிறகு காசோலை வழங்கியவர் பணம் கொடுக்க தயாரக இருந்தும், அறிவிப்பு கொடுத்தவர் பணத்தை பெற மறுத்துவிட்டார்.
.
9. சட்ட அறிவிப்பில் குறிப்பிட்ட 15 நாட்களுக்கு முன்னதாகவே வழக்கு குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்க செய்யப்பட்டிருக்கின்றது.
.
No comments:
Post a Comment