Pages

Wednesday, 20 July 2016

WHILE SHARING A MESSAGE ON FACEBOOK....CAREFUL... YOU WILL BE CHARGED FOR DEFAMATION UNDER IPC AND TORTS.

WHILE SHARING A MESSAGE ON FACEBOOK....CAREFUL... YOU WILL BE CHARGED FOR DEFAMATION UNDER IPC AND TORTS.
.நேற்று ஒரு பெண் தன் கணவருக்கு நெஞ்சு வலி என்று பெங்களுருவில் உள்ள பிரபலமான மருத்துவமனையில் சேர்த்ததாகவும், அங்கு அவரின் இ.சி.ஜி.-யை சரியாக படிக்காமல், சாதாரண வைத்தியம் பார்த்து அனுப்பியதாகவும், பின்னர் அவர் கணவரை பக்கத்தில் உள்ள வேறு டாக்டரிடம் கொண்டு சென்றதில், அந்த இ.சி.ஜி-ல் அவருக்கு மாரடைப்பு வந்துள்ளது தெளிவாக பதிவாகியிருந்தும் முதல் மருத்துவமனை சரியான முறையில் வைத்தியம் பார்க்கவில்லை எனவும், பின்னர் இரண்டாவது மருத்துவமனையில் சேர்த்ததில் அவரது கணவரை காப்பற்ற முடியவில்லை எனவும் பதிவு செய்திருந்தார். அதற்கு பலர் அந்த பெண்ணிற்கு ஆறுதல் சொல்லியிருந்தார்கள். அந்த பதிவை எனது நண்பர் எனக்கு பகிர்ந்து கொண்டார்.
.அந்த பதிவை நானும் பகிர்ந்து கொள்ள நினைத்து, அந்த பெண்ணின் பேஸ்புக் ஐ.டி. சென்று ப்ரொபைல் பார்த்தேன். அந்த பெண்ணைப்பற்றிய எந்தவித தகவலும் இல்லை. அவருக்கு நண்பர்கள் குழுமம் இல்லை. அதாவது, இந்த பதிவிற்காகவே அந்த பேஸ்புக் ஐ.டி. உருவாக்கப்பட்டுள்ளது போல் இருந்தது. அந்த பதிவில் பிரபலமான மருத்துவமனையின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தது. இது ஒரு உண்மை சம்பவமா? அல்லது ஒரு குறிப்பிட்ட மருத்துவமனையின் பெயரை கெடுப்பதற்கான சம்பவமா? தெரியவில்லை. பகிரும் நோக்கத்தை கைவிட்டேன்.
.நண்பர்களே, செய்திகளை பகிரும்முன் லைக் கொடுக்கும் முன் கவனம் தேவை. அந்த செய்தி உண்மைதானா? என்று யோசியுங்கள். தவறான செய்திகளை பகிரும்போது மற்றும் லைக் கொடுக்கம்போது, நீங்கள் குறிப்பிட்ட நபரை அல்லது நிறுவனத்தை அவதூறு செய்ததாக குற்றம் சாட்டப்படுவீர்கள்.
.உண்மைதன்மை எப்படி சார் தெரியும்? என்று கேள்வி எழுப்பினால், தயவு செய்து படித்துவிட்டு அமைதியாக இருங்கள். அதை மற்றவர்களுக்கு பகிராதிர்கள். லைக் கொடுக்காதீர்கள்.
Top of Form
Bottom of Form
Top of Form


No comments:

Post a Comment