Pages

Monday, 1 August 2016

மருத்துவரே நோயாளிக்கு தேவையான மருத்துவ முடிவை எடுக்க வேண்டும்

நோயாளியின் உறவினரின் கோரிக்கையின் படியே அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என ஒரு மருத்துவர் கூறமுடியுமா?

ஒரு நோயாளிக்கு கையில் கட்டி இருந்துள்ளது. நோயாளிக்கு வலிப்பு வரும் மேலும் ஆஸ்துமா நோயாளியாவார அவருக்கு கட்டியை நீக்க அறுவை சிகிச்சை செய்யப்படுகின்றது. அறுவை சிகிச்சையின்போது உடல்நிலை மோசமாகின்றது. பெரிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு இறந்துவிடுகின்றார். 
.
மருத்துவ சேவை குறைபாடு என்று வழக்கிடப்படுகின்றது. அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனை, இறந்தவரின் மனைவி சொன்னதின் பேரில் கட்டி அகற்றப்பட்டது என்கின்றனர்.
.
கட்டியானது உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற நிலையில் இல்லை. நோயாளியின் உறவினர் சொன்னார் என்று கட்டியை அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது இல்லை.  ஏற்கனவே நோயாளி ஆஸ்துமாவால் அவதிப்படும்போது, அதற்கு தேவையான நடவடிக்கைகைள எடுத்து பின்னர் அறுவை சிகிச்சை செய்திருந்தால், அவருக்கு மூச்சு தினறல் வந்து இறந்திருக்கமாட்டார்.  மருத்துவ சேவை குறைபாடு என உறுதி செய்யப்பட்டது.
.
மருத்துவர்கள் முக்கியமாக  அறிந்து கொள்ள வேண்டியது
நோயாளிக்கு என்ன வகை சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பது மருத்துவரே. அதற்கு அவரே முழு பொறுப்பு.
.
அரசு மருத்துவமனைகளில் ஒரு மருத்துவர் நோயாளியை அருகில் உள்ள மருத்துவ கல்லாரிக்கு நோயாளியின் நலன் கருதி மாறுதல் செய்து, அதை நிர்வாக அதிகாரிகள் தடுத்து அதே மருத்துவமனையில் நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்ய ஆணையிட்டால்,  அந்த ஆணையின்படி அந்த மருத்துவர் அறுவை சிகிச்சை செய்தால் அதற்கு அந்த மருத்தவர் பொறுப்பாவர்.   அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவரின் தனிப்பட்ட முடிவில் யாரும் தலையிடமுடியாது. தலையிட்டாலும், அதை அந்த மருத்துவர் நோயாளியின் நலன் கருதி மறுக்கலாம்.  ஆனால், அந்த நோயாளி மற்ற மருத்துவமனைக்கு எதற்காக மாறுதல் செய்யப்டுகின்றார் என்பதை மருத்துவ ஆவணங்களில் தெளிவாக எழுதவது அவசியம்.

A patient had Lipoma in upper limb. Patient was known epilepsy and chronic bronchial asthma.  Surgery performed - Conditions deteriorated and died.  Contention, excision of Lipoma was decided on demand of complainant's wife. Lipoma is a benign growth of tissue. Since there was no danger or threat to life, operation was not urgency.
Doctors are not under any obligation to abide by wishes of patients . Patient was asthmatic suffering from COPD of intrinsic nature and anesthesia will develop respiratory problem. Hospital  failed to take reasonable care hence held liable for negligence.
To know the complete details of Order – refer to: II (2016) CPJ 183 (NC)
of NATIONAL CONSUMER DISPUTES REDRESSAL COMMISSION, NEW DELHI



No comments:

Post a Comment