இரவு நேரங்களில் வீட்டிற்கு முன் ஒரு சிறிய விளக்காவது எரியவிடவேண்டும். ஆனால்
இதை பலர் செய்யாத்தற்கு காரணம் விளக்கு தொடர்ந்து எரிவதால் அதிக அளவிலான மின்சார பில்
வந்துவிடும் என்று நினைப்பதாகும்.
.
மின்சார சாதனங்களின் மின் உபயோகம் எப்படி கணக்கிடப்படுகின்றது என பார்ப்போம்.
மின் சாதனத்தின் வாட்ஸ்ன் அளவை அது உபயோகப்ப்படுத்தப்படும் காலத்தால் (மணி)
பெருக்கி வரும் விடையை 1000-த்தால் வகுத்தால் வருவதுதான் 1 யுனிட் ஆகும்.
.
அதன்படி வாசலில் 25 வாட்ஸ் பல்ப் மாலை 6 மணியில் இருந்து காலை 6 மணி வரை எரிந்தால்,
25 x 12 = 300 W
300 x 60 நாட்கள் = 18000
18000 யை 1000த்தால் வகுத்தால், 18 யுனிட்.
ஆக, இரண்டு மாத்த்திற்கு 18 யுனிட் செலவாகும். ஒரு யுனிட்டிற்கு
ரூ.2.50 வைத்து கொண்டால், ரூ.45 இரண்டு மாத பில்லில் கூட வரும்.
.
நமது வீட்டின் பாதுகாப்பிற்காக இரண்டு மாத்த்திற்கு ஒரு முறை ரூ.45 செலவழிக்கலாமே.
No comments:
Post a Comment