மருத்துவத்துறையில் பல முன்னேறங்கள் வந்தாகவிட்டது. மக்களுக்கும் ஒவ்வொரு மருத்துவ துறையிலும் அதிக அளவு புரிதல் கொண்டவர்களாக இருக்கின்றார்கள். நான் சிறு வயதாக இருக்கும்போது, எங்கள் ஊரில் யாருக்காவது எழும்பு முறிவு ஏற்பட்டால், எங்கள் ஊர் அருகில் இருக்கும் பண்டாரவிளை எனும் ஊரில் சென்று கட்டுப்போடுவார்கள். ஆனால், இன்று எழும்பு முறிவு மற்றும் எழும்பு பிசகு என்றால், உடனடியாக மக்கள் ஆர்த்தோ மருத்துவரை தேடி செல்லும் அளவிற்கு மக்களுக்கு மருத்துவத்துறையில் புரிதல் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் இன்று வரை மருத்துவத்துறையில் மயக்கவியல் துறையை பற்றி மக்களுக்கு எந்தவித புரிதலும் பெருமளவு ஏற்படவில்லை.
.
இன்றும் அறுவை சகிச்சையின் போது தவிர்க்க முடியாத காரணத்தினால் இறப்பு ஏற்படும்போது, மக்கள் இலகுவாக கூறும் காரணம் “ மயக்கமருந்து ஓவர்டோஸ்“ ஆகிவிட்டது என்பதுதான். இன்றைய மயக்கவியல் துறையின் வளர்ச்சியில் “ஒவர் டோஸ்“ என்ற பதம் ஒன்றும் இல்லை ஏனெனில் தேவையான அளவிற்கான மயக்க மருந்துகள், ஒவ்வொருவரின் உடல் எடைக்கு ஏற்பவே கொடுக்கப்படுகின்றது. ஆனால், மயக்க மருந்தில் இருந்து மீண்டு வருவதற்கு, ஒவ்வொருவரின் உடல்நிலைக்கு ஏற்ப சிறிது தாமதம் ஏற்படலாமே தவிர, முற்றிலுமாக ஒருவர் மயக்க மருந்தில் இருந்து வரவில்லை என்று கூறமுடியாது. அவ்வாறான நிலை ஏற்பட்டாலும் அதற்கு மற்ற உடல்நிலை காரணங்களாக இருக்கும்.
.
மயக்கவியல் மருத்துவம் இன்று பெருமளவுக்கு வளர்ச்சி அடைந்துவிட்டது. ஆனால் இன்றும் மக்கள் மயக்கவியலில் குளோரபாம் கொடுத்துதான் மயக்கம் அடைய செய்கின்றார்கள் என்று நினைத்து கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறு மக்களுக்கு மயக்கவியல் துறையில் புரிதல் இல்லாத்தற்கு காரணம்
.
1) மயக்கவியல் மருத்துவர்களுக்கும் நோயாளிகளுக்கும் இடையே ஒரு தொடர் உறவு இல்லாமை.
.
2) மயக்கவியல் மருத்துவ கழகமானது இந்த துறையைப்பற்றி மக்களிடம் எடுத்து செல்லாமை.
.
இந்த மயக்கவியல் துறையைப் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த இந்திய மயக்கவியல் கழகமானது முயற்சி எடுக்க வேண்டும். மக்களிடம் இந்த துறையைப் பற்றி புரிதலை உண்டாக்காதவரை, மக்கள் குளோரபாம் கொடுத்துதான் மயக்கம் அடைய செய்கின்றார்கள் என்றும், மயக்கமருந்து ஒவர் டோஸில்தான் நோயாளி இறந்தார் என்று மயக்கவியல் துறைமீது பழிச் சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள்.

No comments:
Post a Comment