Pages

Thursday, 11 August 2016

நோயாளியை மருத்தவர் பரிந்துரையின் படி பெரிய மருத்துவமனைக்கு மாறுதல் செய்வது....

திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவமனையில் நோயாளியின் நலன் கருதி, நோயாளியை அருகில் உள்ள  மதுரை மருத்துவ கல்லாரிக்கு மாறுதால் (Referral) செய்வதின் அவசியத்தை மக்கள் மற்றும் நோயாளியின் உறவினர்கள் உணரும் வண்ணம், வைக்கப்பட்டிருக்கும் அறிவிப்பு பலகை
  

கீழ் கண்ட பதிவை சில வாரங்களுக்கு முன்னர் எழுதியிருந்தேன். அதை திரும்பவும் பார்வைக்காக மறு பதிப்பு செய்கின்றேன்.


தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்ட அரசு மருத்துவமனைகளில் மாதத்திற்கு பெரிய அறுவை சிகிச்சைகள் 200 க்கு மேல் நடைபெறுகின்றன (மகப்பேறு சிசரியேன் அறுவை சிகிச்சைகளை சேர்க்கவில்லை)
.
அரசு மருததுவர்கள், ஏதாகிலும் மருத்துவ காரணத்தால், நோயாளியின் உடல் நலம் கருதி அருகில் உள்ள பெரிய மருத்துவமனைக்கு (மருத்துவ கல்லுாரி) கொண்டு சென்று அங்கு வைத்தியம் (அறுவை சிகிச்சை) செய்ய, பரிந்துரைத்தால் மருத்துவர்களிடம், மேல் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டியதின் அவசியத்தை முழுமையாக காது கொடுத்து கேளுங்கள். மருத்துவர்கள் நிச்சயமாக நோயாளியின் நலன் கருதியே அவ்வாறு மாறுதலுக்கான பரிந்துரை செய்வார்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். 200 அறுவை சிகிச்சைகள் செய்யும் இடத்தில், உங்கள் உறவினருக்கு மட்டும் அறுவை சிகிச்சை செய்ய மறுப்பதற்கு நிச்சயமாக நியாமான காரணம் இருக்கும்.
.
மாறுதலுக்கு மறுத்து,
.
1.
ஏன் இங்கு வைத்தியம் பார்க்க முடியாது என்று மருத்துவர்களிடம் தர்க்கம் பண்ணுவது
.
2.
செல்வாக்கனவர்களிடம் இருந்து பரிந்துரை லெட்டர் வாங்கி வந்து மருத்துவர்களை நிர்பந்தப்படுத்துவது
.
3.
மருத்துவமனை நிர்வாக அதிகாரிகளிடம் முறையிட்டு, அவர் வழியாக மருத்துவரை நிர்பந்தப்படுத்துவது..
.
.
ஆகியவை நோயாளியின் நலனுக்கு எதிராக, கால தாமத சிகிச்சைக்கு வழி வகுக்கும். அது நோயாளியின் நலனுக்கு நல்லதல்ல.
.
அரசு மருத்துவர்கள் நோயாளியை பெரிய மருத்துவமனைக்கு மாறுதல் செய்ய சொன்னால், உடனே அவர்களின் பரிந்துரையை கேட்டு செயல்படுங்கள்.
.
மாதம் 200 அறுவை சிகிச்சைகளை பரிச்சயம் இல்லாதவர்களுக்கு செய்யும் அரசு மருத்துவர்கள், உங்கள் உறவினரை வேறு பெரிய மருத்துவமனைக்கு மாறுதல் செய்வது என்பது நிச்சயமாக உங்கள் உறவினர் உடல் நலத்தின் மீது அக்கறை கொண்டுதான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


No comments:

Post a Comment