Pages

Monday, 29 August 2016

பதவி உயர்வு அல்லது பொறுப்பானது, ஏன் மூப்பின் அடிப்படையில் வழங்கப்படவேண்டும் – ஒரு பார்வை

அரசுத்துறைகளில் நிர்வாக பணியிடங்களுக்கான பதவி உயர்வு அல்லது பொறுப்பானது,  ஏன் மூப்பின் அடிப்படையில் வழங்கப்படவேண்டும் – ஒரு பார்வை
.
ஒரு அலுவலகத்தில் நிர்வாகப்பணிக்கு கீழ்கண்ட சீனியாரிட்டியில் அலுவலர்கள் இருப்பதாக கொள்வோம்.
A – No.1
B – No.2
C – No.3
D – No.4

மேல் கண்ட வரிசையில் A-க்கு மட்டுமே நிர்வாக பணியானது முதலில் வழங்க வேண்டும்.
..
A முதல் C வரையிலான நபர்கள் பதவி உயர்வு  வேண்டாம் என்ற நிலையில் பதவி உயர்வு D-க்கு வழங்கினால் என்ன நடக்கும்?
.
D-யால் முழுமையாக நிர்வாக அதிகாரத்தை செலுத்த முடியாது. குறிப்பாக A முதல் C வரையிலான அலுவலர்கள் மீது எந்தவித நிர்வாக அதிகாரத்தை செலுத்த முடியாது. ஏனெனில் தற்போது C நிர்வாக பதவியில் இருந்தாலும், பின்னர் A to C அலுவலர்கள் C-யை விட பதவி உயர் பெற்று வரும் நிலையில், D ஆனவர் A to C ஆல் பழிவாங்கப்படலாம். அதற்கு பயந்து D ஆனவர் A to C வரையிலானவர்கள் மீது நிர்வாக அதிகாரத்தை செலுத்த பயப்படுவார்கள.  இந்த  D-ன் பயத்தையே தங்களுக்கு சாதகமாக A to C பயன்படுத்தி, எந்தவித வேலையும் செய்யாமல் பொழுது போக்குவார்கள்.
இந்த பிரச்சனையை தடுப்பதற்காத்தான், பதவி உயர்வு என்பது சீனியாரிட்டி என்ற அடிப்படையில் மூப்பில் இருப்பவர்களுக்கு வழங்கப்படுகின்றது.
.
ஆனாலும், A பதவி உயர்வு வேண்டாம் என்று நினைத்தால் அந்த பதவி உயர்வை அரசு விதிகளின் படி அடுத்த 3 வருடங்களுக்கு Relinquish பண்ணிவிடலாம். ஒரு முறை Relinquish பண்ணினால், அவர் தனது Seniority-யையும் இழப்பார். இந்த முறையில், D என்பவர் A விட எப்போதுமே மூப்பில் இருப்பார் என்பதால், அவரால் A மீது, அவர் நாளை உயர் பதவிக்கு தன்னை விட வந்துவிடுவாரோ என பயமில்லாமல்,  முழு நிர்வாக அதிகாரத்தை செலுத்த முடியும்.
.

இந்த முறையை முழுவதுமாக செயல்படுத்தாத அரசுத் துறையில் திறமையான நிர்வாகம் நடைபெற வாய்ப்பில்லை. மேல் கூறியவாறு A to C நிலையில் இருப்பவர்கள் D-ன் தலையில் பொறுப்பை கட்டிவிட்டு, D-யை பயம் காட்டிக்கொண்டு,  மக்களுக்கு எந்தவித சேவையும் செய்யாமல் காலத்தை தள்ளுவார்கள். 

No comments:

Post a Comment