Pages

Monday, 29 August 2016

இந்து பெண்ணின் வாரிசுரிமை

இந்து குடும்பத்தின் சொத்துக்கள் ஒருவரின் (கணவரின்) மறைவிற்கு பிறகு சட்டப்படி பிரிக்கபடுவதை பற்றி எழுதியபோது, எழுப்ப்ப்பட்ட சந்தேகங்களில் முக்கியமானது, “பெண்ணின் சொத்தானது அவர் மறைவிற்கு பிறகு எவருக்கு செல்லும் என்பதாகும்”?
.
ஒரு குடும்பத்தில் பெண் ஒருவர் வேலைக்கு போய் அவரது சுய சம்பாத்தியத்தில் வீடு வாங்கி கணவர் குழந்தைகளுடன் வசித்து வருகின்றார். அந்த பெண், அவரது வயதான பெற்றோரையும் தன்னுடன் வைத்து கவனித்து வருகின்றார்.  அவரது மறைவிற்கு பிறகு அவரின் சொத்து யாருக்கு செல்லும்?
.
1)   மனைவியின் சொத்து முதலில் கணவர் மற்றும் குழந்தைகளுக்கு (பேரக்குழந்தைகள்) செல்லும்இவர்கள் யாருமே உயிருடன் இல்லையென்றால்,
2)   கணவனின் வாரிசுகளுக்கு செல்லும், - அவர்களும் இல்லையென்றால்,
3)   இறந்தவரின் தாய் தந்தைக்கு செல்லும், அவர்களும் இல்லையென்றால்
4)   இறந்தவரின் தந்தையின் வாரிசுகளுக்கு செல்லும், அவர்களும் இல்லையென்றால், இறுதியாக தாயின் வாரிசுகளுக்கு செல்லும்.
.

உதாரணமாக ஒருவர் (மனைவி) தன் தாய் தந்தையரை வைத்து காப்பாற்றி வருகின்றார்.  அவருக்கு கணவர் இல்லை மற்றும் குழந்தைகள் இல்லை.  இந்த சூழ்நிலையில் அவர் இறக்க நேரிடின், அவருடைய சொத்துக்கள் தாய் மற்றும் தந்தையை சென்றடையாது.  கணவரின் வாரிசுகளுக்கு சென்றடையும். இப்போது கணவருக்கு அப்பா இருந்தால் அவருக்கு சென்றடையும். ஆக, அந்த பெண்ணின் தாய் மற்றும் தந்தை கவனிப்பாரற்ற நிலைக்கு தள்ளப்படுவார்கள். 

No comments:

Post a Comment