Pages

Monday, 29 August 2016

வீட்டில் உள்ள மின் உபயோகப் பொருட்கள் அனைத்தும் முறையாக எர்த் செய்யப்பட்டிருப்பது அவசியம்.

    வீட்டில் உள்ள மின் உபயோகப் பொருட்கள் அனைத்தும் முறையாக எர்த் செய்யப்பட்டிருப்பது அவசியம். முறையாக எர்த் செய்ய்பட்டிருந்தால்தான், மின் கசிவு ஏற்பட்டு அந்த பொருட்களின் மீது பேஸ் வரும்போது, உடனே அந்த சர்க்யுட் ப்யுஸ் போகும். இல்லையெனில், மின் கசிவு உள்ள ப்ரிட்ஜ் போன்றவைகளை குடும்பத்தார் தொட்டால், உயிருக்கு ஆபத்து ஏற்படும்.
    .
    ஒரு பல்பை கொண்டு ஒவ்வொரு வீட்டு மின் உபயோகப் பொருளும் சரியாக எர்த் ஆகியிருக்கின்றதா என்று சரிபார்க்கலாம்.
    .
    படத்தில் உள்ளது போல ஒரு மின்சார பல்பை எடுத்து,... அதன் இரு முனை வயர்களில் ஒன்றை பேஸிலும் மற்றொன்றை அந்த மின் உபயோக பொருளின் மேல் (அதன் பாடியிலும்) வைத்தால், மின் விளக்கு எரிய வேண்டும். ஏனெனில் இப்போது மின்சாரமானது பேஸில் இருந்து புறப்பட்டு பல்ப் வழியாக எர்த்தை சென்றடைவதால் சர்க்யுட் நிறைவாகி பல்ப் எரிகின்றது. மின் உபயோகப்பொருளானது முறையாக எர்த் வழங்கப்படவில்லை என்றால், மின்சார சர்க்யுட் நிறைவு பெறாத்தால் பல்ப் எரியாது.
    .
    இந்த டெஸ்டை மின் சாதனங்களை கையாளும் ஒரு வயர்மேனை வைத்து செய்யவும். ஒரு முனையை பேஸில் நுழைத்தவுடன், பல்ப் தாண்டிய மறுமுனையில் பேஸ் வந்து நிற்கும் என்பதால் அதை தொட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படும்.
    .
    மின்சார சர்க்யுட்டில் அனுபவம் இல்லாதவர்கள் யவரும் இந்த டெஸ்டை தானே செய்து பார்க்காதீர்கள். இதனால் ஆபத்து ஏற்பட்டால், அதற்கு இந்த பதிவை எழுதியவர் பொறுப்பல்ல. இந்த பதவின் நோக்கம் வீட்டில் உள்ள மின் உபயோக பொருள்கள் முறையாக எர்த் செய்யப்பட்டிருக்கின்றதா என்பதை உறுதி செய்வதுதான்.

No comments:

Post a Comment