ஒரு காலத்தில் ஆயுள் காப்பீடு நிறுவனத்தின் முகவர் வீட்டிற்கு பாலிசி எடுங்கள்
வந்தாலே, அவரை எமதர்மரின் மறு அவதாரமாக பார்த்தார்கள். பாலிசி ப்ரோபஷல் பாரத்தில் கையொப்பம் இடும்போது.
பேனா சரியாக எழுதவில்லை என்றால் அது அபசகுனமாக நினைத்து பாலிசி வேண்டாம் என்று கூறிவிடுவார்களாம்.
ஆனால், இன்று ஒருவரின் வாழ்க்கையில், ஆயுள் காப்பீட்டின் அவசியத்தை அனைவரும் அறிந்து,
தானகவே முன் வந்து முகவரை அழைத்து பாலிசி எடுத்து கொள்கின்றார்கள்.
.
ஆனால், இத்தனை வருடம் ஆகியும் மாறாத விஷயமாக நான் கருதுவது, ஒருவர் உயில் எழுதுவதுதான்.
.
”சார், உயில் எழுதி வைத்திருக்கின்றீர்களா” என்று ஒருவரிடம் கேட்டு பாருங்கள்.
அவர் உங்களை எமதர்மராஜா அவரின் பக்கத்தில் இருப்பது போல ஒரு லுக் விடுவார். உயிலின்
அவசியத்தை இன்றும் படித்தவர்கள் பலரும் புரியாமல் இருப்பது என்பது மிக வருத்தமாகத்தான்
இருக்கின்றது.
.
பொதுவாக, உயில் என்பது வயதானவர்கள்தான் எழுதவேண்டும் என்று பொதுவான கருத்து
இருப்பதால் என்னவோ, “அதற்கு என்ன அவசரம் ” என்று இளைய தலைமுறையினரால் ஒதுக்கி வைக்கப்படுகின்றது.
.
ஒருவர் வாழ்க்கையில் சம்பாதித்த்தை, தன் ஆயுளுக்கு பின் யாருக்கு போய் சேரவேண்டும்
என்று நிர்ணயப்பதுதான் சரியான முறையாகும். யவொருவர் திருமணம் செய்துவிட்டாரோ, அவர்
கட்டாயம் தன் வாழ்க்கை துணைவி மற்றும் குழந்தைகள் நலன் கருதி உயில் எழுதி வைக்க வேண்டும். ஒருவர் எத்தனை முறை வேண்டுமானலும் உயில் எழுதலாம்
என்பதால், கல்யாணம் ஆகி ஒரு சொத்து எதாகிலும் வாங்கி முடித்த்துமே உயில் எழுதிவிடவேண்டும்.
பின்னர் அந்த உயிலை காலத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப அதை மாற்றி கொள்ளலாம்.
.
உயில் எழுதுவதால் ஒருவரின் ஆயுளுக்கு
குறை ஒன்றும் ஏற்படபோவதில்லை. மனிதனின் ஆயுள் கடவுளின் கையில். அதை யாரும் மாற்ற
முடியாது. ஆகவே, ஒருவர் ஒரு சொத்திற்கு உரிமையாளராக
இருந்தால், அவர் காலத்திற்கு பிறகு அந்த சொத்து யாரை சென்றடைய வேண்டும் என்று ஒரு உயில்
எழுதி வைப்பது மிக அவசியம்.
No comments:
Post a Comment