எனது உறவினரின் வங்கி கணக்கு எண் 88 என்று ஆரம்பிக்கும். அவருக்கு வழங்கப்பட்ட காசோலைகளில் அவரது வங்கியானது, 80 என்று ரப்பர் ஸ்டாம்பு செய்து, பின்னர் 0-வை கையால் 8 என்று மாற்றி இருந்தார்கள். இதுவரை அவ்வாறாக திருத்தப்பட்ட காசோலையை உறவினர் அனைவருக்கும் வழங்கி வந்தார். எந்தவித பிரச்சனையும் இல்லை.
.
சமீபத்தில் மேற்படி காசோலைகளில் இருந்து இரண்டு காசோலைகளை எல்.ஐ.சி.க்கு அவரது பாலிசி ப்ரிமியத்திற்காக வழங்கினார். அதில் ஒரு காசோலை எந்தவித பிரச்சினை இன்றி பாஸ் ஆகிவிட்டது. அடுத்த காசோலையை, எல்.ஐ.சி.யின் வசூலிக்கும் வங்கியானது, காசோலையில் திருத்தம் உள்ளது அது முறையாக Authentication பண்ண வேண்டும் என்று எல்.ஐ.சி-க்கே திருப்பி அனுப்பி விட்டது.
.
உடனே எல.ஐ.சி. யானது அந்த காசோலையை தனது வாடிக்கையாளருக்கு “ உங்கள் காசோலை Dishonour “ செய்யப்பட்டது எனவும், அதற்கு கட்டணமாக ரூ.125 செலுத்த வேண்டும் எனவும் மற்றும் இனிமேல் ப்ரிமியம் செலுத்தும் பணத்தை DD அல்லது ரொக்கமாக செலுத்த வேண்டும்“ என்று காசோலையுடன் வசூலிக்கும் வங்கியின் Objection Notice வைத்து திருப்பி அனுப்பி வைத்தது.
.
இப்போது எழும் கேள்விகள்.
1) காசோலை Dishonour என்ற ஆகிவிட்டது என்று எல்.ஐ.சி. கூறமுடியுமா?
.
2) காசோலை திரும்பியதாக கொண்டாலும், தனது வாடிக்கையாளர் ப்ரிமியத்திற்கு பணம் அல்லது DD தான் செலுத்த வேண்டும் என்று ஆணையிடமுடியுமா?
.
3) காசோலை திரும்பியதாக ரூ.125வாடிக்கையாளரிடம் இருந்து வசூலிக்க முடியுமா?
.
4) காசோலையில் காசோலை வரையப்பட்ட வங்கி செய்த திருத்தத்திற்கு வாடிக்கையாளர் பொறுப்பேற்க முடியுமா?
.
5) ஒரே நேரத்தில் கொடுத்த இரண்டு காசோலைகளில் ஒன்றை மட்டும் வசூலுக்கு அனுப்பிய வங்கி, ஒரே மாதிரியான காசோலைகளில் ஒன்றை மட்டும் திருப்பி அனுப்ப முடியுமா?
6) காசோலை Dishonour செய்யப்பட்டது என்று தனது வாடிக்கையாளரின் Reputation பாதிக்கும் வகையில் எல.ஐ.சி. அறிவுறுத்தியது சரியா?
கேள்வி எண்.1 க்கு பதில்
Dishonour by non-payment.
.
92.Dishonour by non-payment. A promissory note, bill of exchange
or cheque is said to be dishonoured by non-payment when the maker of
the note, acceptorof the bill or drawee of the cheque makes default in payment upon being duly required to pay the same.
மாற்று முறை ஆவண சட்டம் 1881-ன் பிரிவு 92-ன் படி காசோலையை வரைந்தவர் அதற்கு பணம் கொடுக்க முடியாத (போதுமான பணம் இல்லை) சூழ்நிலையில் மட்டுமே Cheque dishonour என்று அழைக்கப்பட வேண்டும்.
இதன்படி பார்த்தால், காசோலையை வசூலுக்கு தாக்கல் செய்து, அந்த காசோலையில் வேறு ஏதாகிலும் பிரச்சனை இருந்து அந்த காசோலையானது, காசோலை தாக்கல் செய்தபவரிடம் வங்கி திருப்பி கொடுக்கும் பட்சத்தில் , அந்த காசோலை Dishonoured என்று அழைக்க்கூடாது. காசோலை Dishonoured என்று அழைப்பிதற்கு, அந்த காசோலையானது அது வரையப்பட்ட வங்கியிடம் அனுப்ப்ப்பட்டு, அவர்களால் மட்டுமே Dishonour செய்யப்படவேண்டும்.
கேள்வி எண் 2-க்கு பதில்
.
பொதுவாக ஒருவர் எதாகிலும் லோன் எடுத்து அதற்காக வழங்கிய காசோலை பணம் இல்லை என்று திரும்பி வந்தால், அவரிடம் காசோலைக்கான பணத்திற்கு வசூல் செய்ய வருபவர்கள் அந்த தொகையை ரொக்கமாகவே வாங்குவார்கள். ஏனென்றால் ஏற்கனவே காசோலை திரும்பி வந்த்தால், காசோலை வழங்கியவருக்கு அந்த தொகையை கொடுக்க வேண்டியட சட்டப்படியான கடப்பாடு உள்ளது (legal liability).
.
ஆனால், ஒருவர் ப்ரிமியம் கட்ட தவறினால், அங்கு சட்டப்படியான கடப்பாடு இல்லை. ஏனெனில் எல்.ஐ.சி.-க்கு ஒருவர் தனது பிரிமியத்தைதான் கட்டுகின்றாரே தவிர லோன் அல்ல. மேலும் தாமத்திற்கு எல்.ஐ.சி. வட்டி வசூலிக்கின்றது. ஆகவே, காசோலை திரும்பி வந்த்தாக கூறி, ப்ரிமியம் தொகையை பணமாகத்தான் செலுத்தவேண்டும் என்று எல்.ஐ.சி. நிர்பந்தப்படுத்த எந்தவித அதிகாரமும் இல்லை. இவ்வாறான நிர்பந்தம், எல்.ஐ.சி. தனது வாடிக்கையாளர்களை மிரட்டும் விதமாகவும், அவர்களை இழிவுப்படுத்துவதாகவும் உள்ளது.
கேள்வி எண் 3-க்கு பதில்
.
காசேலை dishonour ஆகி வந்தால் எல்.ஐ.சி.யின் வசூலிக்கும் வங்கி (Bankers of LIC) LIC கணக்கின் மீது அபராதம் விதிக்கலாம். அந்த பணத்தை எல்.ஐ.சி. வாடிக்கையாளரிடம் இருந்துதான் பெற வேண்டிய நிலையில் ரூ.125 வசூலிப்பது கூட சரியாக இருக்கலாம். ஆனால், மேற்படி பிரச்சனையில் அவர்கள் வசூலிக்கும் வங்கியோ (அவர்களது வங்கியே) காசோலையில் திருத்தம் இருக்கின்றது என திருப்பி அனுப்பி வைத்த நிலையில், அதற்கு வாடிக்கையாளரிடம் ரூ.125 செலுத்த சொல்வது நியாமானது அல்ல. வாடிக்கையாளருக்கு காசோலையை பதிவுத்தபாலில் அனுப்பி வைத்துள்ளதால், அதற்கான கட்டணத்தை வசூலிக்க எல்.ஐ.சி. க்கு உரிமை உண்டு. பிரச்சனையின் அடிப்படையில் அபராதம் வசூலிக்க வேண்டுமே தவிர, அவரது வங்கியால் திருப்பி கொடுத்த காசோலைக்கு ரூ.125 அபராதம் வசூலிப்பது தவறான செயலாகும்.
கேள்வி எண் 4-க்கு பதில்
.
நடந்த தவறுக்கு காசோலை வழங்கிய வங்கியே பொறுப்பாகும். அவர்களிடம் விசாரித்தால், காசோலை எங்களிடம் வந்து மேற்படி குறை இருக்கின்றது என்று நாங்கள் திருப்பி அனுப்பியிருந்தால், நாங்கள் பொறுப்பேற்கின்றோம். வழங்கிய இரண்டு காசோலைகளில் ஒன்று எங்களிடம் வந்த்தில் அதற்கு பணம் வழங்கியுள்ளோம். காசோலை எங்களிடம் வராதவரை அதற்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது என்றார்கள். ஆக மொத்தம், அந்த தவற்றிற்கு வாடிக்கையாளரும் பொறுப்பானவர் அல்ல.
கேள்வி எண் 5-க்கு பதில்
.
எல்.ஐ.சி.யின் வங்கியாளர் வசூலுக்கு பெற்ற ஒரே மாதிரியான இரு காசோலைகளில் ஒரு காசோலையை மட்டும் திருப்பி அனுப்பும் வகையில் உள்ள நடைமுறைகளை அவர்கள்தான் விளக்க கடமைப்பட்டுள்ளார்கள்.
கேள்வி எண் 6-க்கு பதில்
.
காசோலை dishonour ஆனது என்று எல்ஐ.சி வாடிக்கையாளருக்கு அறிவுறுத்தியது தவறு.
No comments:
Post a Comment