Pages

Monday, 1 August 2016

பாஸ்போர்ட் எடுக்கும்போது Surname அவசியமாக குறிப்பிடுங்கள்.

தமிழகத்தில் பெரும்பாலோனர் பாஸ்போர்ட் எடுக்க செல்லும்போது, ஒரு பிரச்சனையை சந்திப்பார்கள்.  Given Name என்ற இடத்தில் தங்கள் பெயரை எழுதிவிடுவார்கள். Surname என்ற இடத்தில் தங்கள் initial-யை expand பண்ணி எழுதுவார்கள்.
.
உதாரணமாக
.
MUTHUSAMY. M என்று அவருடைய கல்வி சான்றிதழ்களில் இருந்தால், அவர்கள் கீழ்கண்டவாறு எழுதுவார்கள். (இவரின் தகப்பனார் பெயர் முருகன்)
.
.Given name: MUTHUSAMY
Surname: Murugan
.
இவ்வாறு Surname-ல் அப்பா பெயரை எழுதுவது அவசியமா? பாஸ்போர் அலுவலகம் இந்த Surname என்ற இடத்தை காலியாக விட்டால், பாஸ்போர்ட் வழங்குமா?
.
பாஸ்போர்ட் அலுவலகம் Surname-யை காலியாகவிட்டாலும் Given name-ல் MUTHUSAMY என்று எழுதினால்,  பாஸ்போர்ட் வழங்கும். 
.
பிறகு என்ன சார் இந்த பதிவின் நோக்கம்.
.
இவ்வாறு தனது பெயரை மட்டுமே கொண்ட ஒருவர் அமெரிக்க நாட்டு Visa கேட்டு விண்ணப்பிக்கும்போது, அவருக்கு விசா வழங்கும தாதுதரகம், கீழ்கண்டவாறு வழங்கும்
.
Surname: MUTHUSAMY
Given name: FNU
FNU என்றால் First Name Unknown என்று அர்த்தமாகும்.
.
வெளிநாடு சென்றவர் கார் லைசென்ஸ் வாங்கவே, Social Security எண் பெற முயற்சிக்கும்போது,  அவருக்கு visa-ல் Given Name: FNU என்று எழுதப்பட்டிருப்பதால், பிரச்சனை வரும். பின்னர், அருகில் உள்ள இந்திய தாதகரத்திற்கு சென்று, பாஸ்போர்ட்டில் சென்று மாற்றி வரவேண்டும்.
.
ஆகவே, வெளிநாடு செல்பவர்களுக்கு Surname மிக அவசியம். அந்த இடத்த்தை தங்கள் தகப்பனார் பெயர் கொண்டோ, அல்லது குடும்ப பெயர் (Surname) இருந்தால் அதை கட்டாயம் நிரப்புங்கள்.


முக்கியமான குறிப்பு – Surname எழுதிவிட்டால், அமெரிக்க தாதுகரம் மற்றும் அனைத்து வெளிநாடுகளிலும் Surname-ல் எழுதியுள்ள பெயரை வைத்தை உங்களை கூப்பிடுவார்கள். ஆகவே, தகப்பனார் பெயர் Surname ஆக எழுதப்பட்டிருந்தால், உங்கள் காதுகளை உங்கள் அப்பா பெயர் அழைக்கும்போது, உணர்வதுபோல் நன்கு தீட்டிக்கொண்டு அங்கு அமர்ந்திருங்கள். 

No comments:

Post a Comment