Pages

Monday, 1 August 2016

Wazir என்ற ஹிந்தி படம்.......

நேற்று Wazir என்ற ஹிந்தி படம் பார்த்தேன். அமிதாப் சிறப்பாக வயதான வேடத்தில் நடித்திருந்தார். அவர் ஒரு செஸ் சேம்பியன். அவரது பெண் ஒரு ஒரு அமைச்சரின் மகளுக்கு செஸ் கற்றுக்கொடுக்க செல்லும்போது . மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்துவிடுவார். அந்த அமைச்சர்தான் தனது மகளை கொன்றிருப்பார் என அமிதாப் ஆணித்தரமாக நம்புவார் ஆனால், நடந்த்து விபத்து என்று வழக்கு முடித்துவைக்கப்படும்.
.
தீவிரவாதிகளை ஒடுக்கும் பிரிவில் ஒரு IPS அதிகாரி இருப்பார். அவரது சிறு குழந்தையை தீவிரவாதிகள் சுட்டுக் கொண்றுவிடுவார்கள்.  அதற்கு தான்தான் காரணம் என நினைத்து தன்னை சுட்டுக்கொல்ல தயாராக மயானத்தில் முயற்சிக்கும்போது, ஒரு கார் வெளிச்சத்தை அவர் மேல் பட்டதால், தன்னை தானே சுட்டுக்கொள்வதை தவிர்த்துவிடுவார்.
.
வெளியே வரும்போது மாயனத்தின் வெளியே ஒரு பர்ஸ் கிடைக்கும். அதை அதன் உரிமையாளரிடம் கொண்டு வந்து சேர்க்கும்போது, அமிதாப் உரிமையாளர் என்ற வகையில் அவருடன் நட்பு ஏற்படும். அமிதாப் அவருக்கு செஸ் கற்றுக்கொடுப்பார். பின்னர் அவரிடம் தனது மகள் இறந்த விபரத்தையும், அதற்கு அந்த அமைச்சர்தான் காரணம் என்று கூறுவார்.
.
இதற்கு இடையில் அமைச்சர் மீது அமிதாப் செருப்பை எடுத்து வீசிவிடுவார். அதற்காக அமைச்சரின் ஆட்கள் அமிதாப்பை வீட்டில் வந்து தாக்கிவடுவார். IPS அதிகாரி அவருக்கு பாதுகாப்பு கொடுப்பார்.
.
கடைசியாக தீவிரவாதிகள் அமிதாப்பின் வண்டியில்  குண்டு வைத்து கொன்று விடுவார்கள். அவரது நண்பரான IPS அதிகாரி, அமிதாப்பின் இறப்பை தாங்க முடியாமல், அந்த அமைச்சரை பழிவாங்குவார். படம் முடிவடையும்.

(இதில் Twist – அமிதாப்பை எந்த தீவிரவாதியும் தாக்கியிருக்க மாட்டார்கள், அவரே IPS நண்பருடன் வேண்மேன்றே நட்பு ஆரம்பித்து, அந்த நட்பை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, அந்த அமைச்சரை IPS அதிகாரி கொல்லும் அளவிற்கு கொண்டு செல்வார். அமிதாப்பையும் எந்த தீவிரவாதியும் குண்டு வைத்து கொல்லமாட்டார்கள். தானே காரில் குண்டு வைத்து அதை ஆக்டிவேட் பண்ணி இறந்துபோவார். ஆனால், தனது நண்பர் IPS க்கு அமைச்சர் மேல் கோபம் வரவேண்டும் என்றே அவ்வாறு Plan செய்வார். தனது மகளை கொன்றவரை, பழிவாங்க எந்தவித வாய்ப்ப இல்லாத நிலையில் “நட்பு“ என்ற உறவை கொண்டே தான் நினைத்த்தை சாதித்துவிடுவார்).

(இந்த படத்தில் ரீரிகார்டிங் அருமை. தமிழ் படங்களை போல சத்த்த்தை ஏற்றி இறக்கி இம்சிக்கவில்லை)

No comments:

Post a Comment