ஒவ்வொரு நான்கு சக்கர வானமும் 10 ஆயிரம் கி.மி. ஒடியதும், அதற்கு இன்ஜின் ஆயில்
மாற்ற வேண்டும் அல்லது 6 மாத்த்திற்கு ஒருமுறை
ஆயில் மாற்ற வேண்டும் என்கின்றார்கள். 10 ஆயிரம் கி.மி. ஒடியதும் மாற்ற வேண்டும் என்பதைக்கூட
ஏற்றுக்கொள்வதாக உள்ளது. ஆறுமாத்த்திற்கு ஒரு
முறை (1000 கி.மி ஒடினாலும்) மாற்ற வேண்டும் என்பது கொஞ்சம் ஒவராக, வாகன உரிமையாளர்களை
பயங்காட்டுவதாக உள்ளது.
..
எனது ஒரு கார் ஒரு வருடத்திற்கு 5000 கி.மி.தான் ஒடும். அதில் நான் வருடத்திற்கு
ஒரு முறைதான் ஆயில் மாற்றுவதை வழக்கமாக வைத்துள்ளேன்.
.
.ஒரு முறை கம்பெனியில் ஆயில் மாற்ற கொண்டு சென்றேன். எஸ்டிமேட் பில் ரூ.9000
சொன்னார்கள். உடனே கேட் பாஸ் வாங்கி, வெளியே வந்து அனைத்து கார்களையும் சர்வீஸ் செய்யும்
ஒரு நல்ல சர்வீஸ் சென்டரில் விட்டு கம்பெனியில் சொன்ன அனைத்து வேலைகளையும் செய்தேன்.
மொத்த செலவு ரு.2100. மீத பணத்தில் அந்த வருடத்திற்கான இன்சூரன்ஸ் எடுத்து முடித்தேன்.
.
கம்பெனி சர்விஸிக்கு சென்றால் .....வாடிக்கையாளரின் பர்ஸை பதம் பார்க்காமல்
விடுவதில்லை.
.
No comments:
Post a Comment