IN THE
SUPREME COURT OF INDIA
CIVIL
ORIGINAL JURISDICTION
Writ
Petition (Civil) No. 360 of 2021
Kishan Chand
Jain …Petitioner
Versus
Union of
India & Ors …Respondents
மனுதாரர் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்
ஷரத்து 32-ன் கீழ் மாண்புமிகு
உச்சநீதிமன்றத்தின் அதிகார வரம்பை இந்த
நீதிப்பேராணையின் வாயிலாக கோருகிறார். பெரும்பாலான
மாநில தகவல் ஆணையங்கள், மாநிலங்களின் தலைநகரங்களில் அமைந்து, அங்கு மட்டுமே அதன்
நடவடிக்கைகளை நடத்துவதால், அங்கு சென்று வழக்கு
விசாரணையில் கலந்து கொள்ளும் மனுதாரருக்கு
அதிக செலவினங்களை ஏற்படுத்துகின்றது. எனவே, மனுதாரர்கள் மாநில
தகவல் ஆணையத்தின் வழக்கு விசாரணையில் நேரடியாக
ஆஜராவதற்கு பதிலாக, மனுதாரரின் விருப்பத்தின்பேரில், hybrid hearing மூலமாக
( நேரடியாக விசாரணையில் கலந்து கொள்ளவது, மற்றும் மாற்றாக
பிற முறையிலான, வீடியோ கான்பரன்சிங், வாட்ஸ்ஆப்
வீடியோ மூலமாக கலந்து கொள்வது)
வழக்கில் ஆஜராக அனுமதிக்கப்படவேண்டும் என்றும் மற்றும்
பிற பரிகாரங்கள் கோரியும் இந்த நீதிப்பேராணையை தாக்கல்
செய்கின்றார்.
இந்த நீதிப்பேராணையில், ஒவ்வொரு மாநில தகவல்
ஆணையமும் அவர்கள் தரப்பிலிருந்து மேற்படி
hybrid hearing அந்த மாநில தகவல் ஆணையத்தின் நடைமுறையில்
இருக்கின்றதா என்பதை பற்றிய
ஒரு அபிடவிட்டை மாண்புமிகு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்கின்றார்கள். அவ்வாறே, மாண்புமிகு
தமிழ்நாடு தகவல் ஆணையமும் hybrid mode முறையானது (அதாவது
நேரடி விசாரணை முறையுடன் virtual hearing முறையும் சேர்ந்தது)
நடைமுறையில் உள்ளதாக அவர்களது அபிடவிட்டில் கூறியுள்ளார்கள். இது ஆணையின் பாரா 14-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கில், மாண்புமிகு
உச்சநீதிமன்றமானது பாரா 23-ல் கீழ்கண்டவாறு
ஆணையிடுகின்றது.
23. In view
of the above discussion, we are of the considered view that access to the
Information Commissions is integral to securing the right to information, which is a
necessary concomitant of right to equality under Article 14, the freedom of
speech and expression under Article 19(1)(a) of the Constitution, and the
right to life under Article 21. Accordingly, we direct that all SICs across the country
must provide hybrid modes of hearing to all litigants for the hearing of
complaints as well as appeals. All SICs must provide an option for availing of
a hybrid mode of hearing which shall be at the discretion of the applicant,
or as the case may be, the appellant. The links for availing of the option must
be stipulated in the daily cause list of the Information Commissions
across the country. This shall be operationalized no later than by 31
December 2023.
மேற்படி ஆணையின் பாரா 14-ல் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் hybrid hearing இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையிலும், பாரா 23-ல் ஆணையிட்டவாறு, இந்த நடைமுறையானது அனைத்து மாநில தகவல் ஆணைங்களால் 31.12.2023க்குள் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும் என்ற நிலையிலும், இவ்வாறான விசாரணை முறையில் எந்த முறையை தேர்ந்தெடுப்பது என்பது மனுதாரர் மற்றும் மேல்முறையீட்டாளரின் விருப்பம் என்ற முறையிலும், மாண்புமிகு தமிழ்நாடு தகவல் ஆணையமானது மனுதாரரர் மற்றும் மேல்முறையீட்டாளரின் விருப்பத்தின்பேரில், விசாரணைக்கு hybrid mode
hearing (நேரடியாகவோ (Physical hearing)
அல்லது வீடியோ கான்பரன்சிங், வாட்ஸ்ஆப்
வீடியோ மூலமாகவே (virtual hearing)) கலந்து கொள்ள அனுமதிக்கும் என்றே புரிதல் கொள்ள வேண்டும்.
ஆகவே, 31.12.2023-க்கு பிறகு மேற்படி
மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் ஆணையின்படி, மனுதாரர்/மேல்முறையீட்டாளர் வழக்கு விசாரணையில் virtual hearing முறையில் கலந்து கொள்வதை தேர்ந்தெடுத்து கொள்ள மேற்படி மாண்புமிகு உச்சநீதிமன்ற ஆணையானது வழிவகை செய்வதால், விசாரணைக்கான அறிவிப்பினை மாண்புமிகு தமிழ்நாடு தகவல் ஆணையத்திடம் பெற்றவுடன், மனுதாரர்/மேல்முறையீட்டாளரானவர் தமிழ்நாடு தகவல் ஆணையத்திடம், virtual hearing-ல் கலந்து கொள்ள
இருப்பதை முன்கூட்டியே தெரியப்படுத்துவது என்பது தமிழ்நாடு தகவல்
ஆணையத்திற்கு அவ்வாறான நடைமுறைக்கு அவர்களை தயார் படுத்திகொள்ள
வசதியாக இருக்கும்.
மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் இந்த ஆணையானது தகவல்
அறியும் உரிமை சட்டத்தினை பயன்படுத்துவோருக்கு
அளிக்கப்பட்டிருக்கும் ஒரு சிறப்பான ஆணையாகும்.
இந்த ஆணையால், மனுதாரர் சென்னைக்கு சென்று வழக்கு விசாரணையில்
கலந்து கொள்ளும் வகையிலான போக்குவரத்து செலவினங்கள் முற்றிலுமாக தவிர்க்கப்படும். (இந்த hybrid hearing நடைமுறையானது ஒன்றும், மாண்புமிகு தமிழ்நாடு
தகவல் ஆணையத்திற்கு புதிதானது அல்ல. கொரோனா காலத்தில்
வாட்ஸ்ஆப் வீடியோ மூலமாக தமிழ்நாடு மாநில
தகவல் ஆணையர்களால் இந்த நடைமுறை சிறப்பாக
செயல்படுத்தப்பட்டது)
(பொறுப்பு விலகல்- மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின்
ஆணையின் சில பகுதிகளுக்கு மட்டுமே
விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. முற்றிலும் இந்த ஆணையை பற்றி தெரிந்து கொள்ள விருப்பப்படுபவர்கள், இணையத்தளத்தில் இருக்கும்
இந்த ஆணையை படித்து அறிந்து கொள்ள கோரப்படுகின்றார்கள்)