இந்த பிரிவானது பொது தகவல் அலுவலரால் தகவல்களை இலகுவாக மறுக்க காரணமான பயன்படுத்தப் படுகின்றது. இந்த பிரிவில் வரம்புரையாக கொடுக்க பட்டிருக்கும் விஷயம் மிக முக்கியமானது. அதாவது நீங்கள் கோரும் தகவல்களை, நாடளுமன்றமோ அல்லது சட்டமன்றமோ கோரினாலும் அது மறுக்கப்பட வேண்டிய தகவல்களாக இருந்தால் மட்டுமே அதை உங்களுக்கும் மறுக்கப்படவேண்டும்.
ஆகவேதான் எனது த.அ.உ. சட்ட மனுவில் (முன்னர் பதிவை பார்க்கவும்) வரிசை எண் 14ல் ஒரு வினாவை எழுப்பி இருப்பேன். பொது தகவல் அலுவலரானவர் நாடளுமன்றமோ அல்லது சட்டமன்றமோ கேட்டல் மறுக்கமுடியாது என்று பதில் கூறினால், உங்களுக்கும் அவர் அந்த தகவலை மறுக்க முடியாது.
No comments:
Post a Comment