Pages

Sunday, 28 June 2020

S.ராபின்சன் எதிர் தமிழ்நாடு தகவல் ஆணையம்

S.ராபின்சன் எதிர் தமிழ்நாடு தகவல் ஆணையம்
.
ஏற்கனவே நிர்ணயக்கப்பட்ட கட்டணத்தை செலுத்தி ஆவணங்களை பெறுவதற்கான ஒரு நடைமுறையானது ஒரு அரசு அலுவலகத்தில் இருக்கும்போதுஅங்கு சில ஆவணங்களை பெற அதற்கான கட்டணத்தைதகவல் அறியும் உரிமை சட்ட விதிகளின்படி செலுத்தி அந்த ஆவணங்களைின் நகலை கோர முடியுமா?.
.
இதற்கான விடை அறிய “S.ராபின்சன் எதிர் தமிழ்நாடு தகவல் ஆணையம்)“ என்ற தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் விசாரணையின் விபரங்களை (6114/Enquiry/F/13(40062/F/2012) மற்றும் அதை தொடர்ந்து சென்னை உயர்நீதி மன்ற நீதிப்பேராணை W.P. (MD) No. 4309 of 2014, Decided On: 13.04.2017(MANU/TN/1189/2017) பற்றி பார்ப்போம்.
.
இந்த வழக்கு விசாரணையில் மனுதாரர் இரண்டு பதிவு செய்யப்பட்ட பத்திரங்களின் நகலை சார்பதிவாளர் அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி வழங்கவில்லை என்று இரண்டாம் மேல் முறையீடு செய்கின்றார்சார்பதிவாளர் அலுவலகமானதுஆவணத்திற்கான அரசு நிர்ணயத்தை கட்டணத்தை செலுத்திஉரிய சார்பதிவாளர் அலுவலகத்தில் இருக்கும் நடைமுறையின்படி ஆவணங்களை பெற்றுக்கொள்ள அறிவுறுத்துகின்றதுஇதை தமிழ்நாடு தகவல் ஆணையமும் தனது விசாரனையில் உறுதி செய்கின்றது.
.
அந்த விசாரணயின் முடிவை எதிர்த்து மனுதாரர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிப்பேராணை தாக்கல் செய்கின்றார்மனுதாரர் தரப்பில் இருந்து கீழ்கண்ட உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற ஆணைகளை மேற்கோள் காட்டப்படுகின்றது..University of Calcutta v. Pritam Rooj [MANU/WB/0084/2009 : AIR 2009 CALCUTTA 97] andCBSC v. Aditya Bandopadhyay [MANU/SC/0932/2011 : (2011) 8 SCC 497].".மேலும் சட்டத்தின் பிரிவு 22-யானது ஒரு முக்கிய வாதமாக எடுத்து வைக்கப்படுகின்துஅதன் படி பிற சட்டங்களில் எதிலும் தகவல் அறியும் உரிமை சட்ட பயன்பாடுக்கு முரணாக எது அடங்கியிருந்த போதிலும்தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வகைமுறைகள் மீதுார்ந்து இயங்கும் (Overriding Effect)..தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் தரப்பில் இருந்து கீழ்கண்ட டெல்லி மற்றும் சென்னை உயர்நீதிமன்ற ஆணைகள் மேற்கோளாக நீதிமன்றத்தின் முன் எடுத்து வைக்கப்படுகின்றது.Registrar of Companies & Ors. vs. Dharmendra Kumar Garg & Anr. (01.06.2012 - DELHC)The Registrar General vs. A. Kanagaraj and The Registrar, The Tamil Nadu Information Commission (14.06.2013 - MADHC)The Registrar General vs. K.U. Rajasekar (17.04.2013 - MADHC).
.
முடிவாகமாண்புமிகு மதுரை ஆயம் சென்னை உயர்நீதிமன்றம் தனது ஆணையில் கீழ்கண்டவாறு குறிப்பிடுகின்றது.” RTI Act cannot be invoked for all purposes regardless of the fact that there is existence of alternative effective mechanism provided under the respective departments for seeking information. If such recourse is encouraged and entertained it will destroy the very frame work of the respective mechanism which provides for furnishing information under the respective department”அதாவதுஒரு ஆவணத்தை பெற ஏற்கனவே ஒரு நடைமுறையானது அரசால் பின்பற்றி வரும் நிலையில் (கட்டணம் செலுத்தி பதிவு செய்யப்பட்ட பத்திரங்களின் நகலை பெறுவதற்கு), அந்த நடைமுறையில்தான் ஆவணங்களை பெற வேண்டுமே தவிரதகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக அந்த ஆவணங்களை பெற முடியாது என்ற ஆணையை வழங்கியது..இந்த பதிவிற்கு பிறகு  ”தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் எதிர் தமிழ்நாடு தகவல் ஆணையம் மற்றும் பலர். (WP No.16108 of 2019 Order dated 14.10.2019)” பதிவினை கட்டாயம் படிக்கவும்.xx

No comments:

Post a Comment