தமிழ்நாடு
அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் எதிர்
தமிழ்நாடு தகவல் ஆணையம்
மற்றும் பலர். (WP No.16108 of 2019
Order dated 14.10.2019)
.
ஏற்கனவே
நிர்ணயக்கப்பட்ட கட்டணத்தை செலுத்தி ஆவணங்களை பெறுவதற்கான நடைமுறையானது ஒரு அரசு அலுவலகத்தில்
இருக்கும்போது, அங்கு சில ஆவணங்களை
பெற அதற்கான கட்டணத்தை தகவல்
அறியும் உரிமை சட்ட விதிகளின்படி
செலுத்தி அந்த ஆவணங்களைின் நகலை கோர
முடியுமா?. இந்த கேள்விக்கு “முடியாது“
என்று ராபின்சன் எதிர் தமிழ்நாடு
தகவல் ஆணையம் (2017) நீதிப்பேராணையில் (இந்த ஆணையின் விபரத்தை
முந்தைய பதிவில் பார்க்கவும்) வழங்கப்பட்ட
ஆணைக்கு ஒரு
மாறுதல் ஆணையாக WP 16018 of 2019-ல் வழங்கப்பட்டுள்ளது. இந்த
WP No.16108 of 2019 பற்றி
விரிவாக பார்ப்போம்.
.
தற்போது
தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைகழகத்தில்
மாணவர்களுக்கு தேர்வின் விடைத்தாள்களை வழங்க ஒரு நடைமுறை
இருக்கின்றது. அதன்படி மாணவர்கள் ஒரு
தேர்விற்கு குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்தி விடைத்தாள்களின் நகலை பெற்று கொள்ளலாம்.
(ரூ.400-என்று இணையத்தள தகவல்கள்
தெரிவிக்கின்றன). மேலும் பெயில் ஆன
மாணவர்கள் மட்டுமே விடைத்தாள்களின் நகலை கோரமுடியும். ஆனால் மாணவர்கள் தகவல்
அறியும் உரிமை சட்டத்தில் கோருவதால்,
அதன் விதிகளானது பக்கத்திற்கு ரூ.2 செலுத்தி பெற்று
கொள்ள வழி வகை செய்கின்றது.
ஒரு மாணவனின் விடைத்தாள் மொத்தம் 45 பக்கம் என்றால், அவர்
ரூ.90 செலுத்தினால் போதுமானது.
.
சட்டப்
பல்கலைக்கழக மாணவர்கள் சிலர், அவர்கள் எழுதிய
தேர்வின் விடைத்தாள்களின் நகலை, தகவல் அறியும் உரிமை
சட்டம் வாயிலாக கோருகின்றார்கள். பல்கலைக்கழகம்
அதை வழங்க மறுக்கின்றது. தமிழ்நாடு
தகவல் ஆணையத்திடம் முறையீடு செய்ததில், தகவல் ஆணையம் தேர்வின்
விடைத்தாள்களை மாணவர்களுக்கு
தகவல் அறியும் உரிமை சட்டத்தின்
வாயிலாக வழங்க ஆணையிடுகின்றது. தகவல்
ஆணையத்தின் ஆணையை இரத்து செய்ய
கோரி பல்கலைக்கழகம் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிப்பேராணை
தாக்கல் செய்கின்றது.
.
மாண்புமிகு
சென்னை உயர்நீதிமன்றத்தில், சட்டப் பல்கலைக்கழகமானது,
மாணவர்களின் விடைத்தாள்களை.அ.உ. சட்டத்தில்
கோரியதற்கு எதுவும் மறுப்பு தெரிவிக்கவில்லை
ஆனால் நடைமுறையில் உள்ள பல்கலைக்கழக விதிகளின்
படி அதற்கான கட்டணத்தை செலுத்தினால்,
அவற்றை வழங்க தயாராக இருப்பதாக
கூறுகின்றது.
.
.
இந்த நீதிப்பேராணையில் முதலாவதாக Central Board of
Secondary Education (CBSE) and another vs. Aditya Bandopadhyaya & Others
(2011) 8 SCC 497 என்ற வழக்கு மேற்கோளாக எடுத்துக்கொள்ளப்படுகின்றது.
அந்த வழக்கில் தகவல் அறியும் உரிமை
சட்ட பிரிவு 8(1)(e)-ன் படி விடைத்தாள்களின்
நகல் வழங்க மறுக்கப்படுகின்றது. ஆனால், திருத்தப்பட்ட விடைத்தாள்களானது
திருத்திய ஆசிரியரின் Opinion என்பதால் அது தகவல் எனும்
பதத்தில் வரும் என்று தீர்மானிக்கப்படுகின்றது.
.
இந்த வழக்கில் அடுத்ததாக Institute of
Companies Secretaries of India (ISCI) vs. Paras Jain (decided on 11.04.2019 in
Civil Appeal No.5665 of 2104) என்ற
மாண்புமிகு உச்சநீதிமன்ற வழக்கு மேற்கோளாக எடுத்து
கொள்ளப்படுகின்றது. இந்த வழக்கில் தகவலை
பெற இரண்டு வழிமுறைகள் அதாவது
த.அ.உ.
சட்டம் மற்றும் நிறுவனத்தில் நடைமுறைகள்,
இருக்கும்போது, மனுதாரரானவர் அவருக்கு விருப்பப்பட்ட வழிமுறையை தேர்ந்தெடுதது கொள்ளலாம் என்று தீர்ப்பு வழங்கப்படுகின்றது.
.
மேற்கண்ட
Institute of Companies Secretaries of India (ISCI) vs. Paras Jain வழக்கின் அடிப்படையில், தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின்
விதிமுறைகள் த.அ.உ.
சட்டத்திற்கு மேலோங்கி நிற்கமுடியாது
எனவும், மேலும் அரசு நிர்வாகத்தில்
வெளிப்படை தன்மையை கொண்டு வர
பாரளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டத்ததை மற்ற நிறுவனங்களால் இயற்றப்பட்ட
நெறிமுறைகள், விதிகளால் ஒதுக்கி வைக்க முடியாது
எனவும், பாரளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டமே மேலோங்கி இருக்கும்
(”When the Parliament enacted the law in order to develope transperancy in
public administration, undoubtedly, the other procedures or regulations
formulated by any other institutions, cannot prevail over the Act of the
Parliament and those Rules and Regulations of the such individual institutions
can never override the purpose and object of RTI Act, 2005.) எனவும் அதன்படி தீர்மானித்து, மாணவர்கள்
த.அ. உ.சட்டத்தில். கோரிய விடைத்தாள்களின் நகலை அவர்களுக்கு த.அ.உ
விதிகளின்படி கட்டணத்தை பெற்றுக்கொண்டு சட்டப் பல்கலைக்கழகம் வழங்க
மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தால் ஆணையிடப்பட்டது.
.
.
....இத்துடன்
இந்த நீதிப்பேராணையின் சாரம்சம் முடிவுற்றது.
....
....எனது
கருத்து.
.
ராபின்சன்
(2017) நீதிப்பேராணையில் அலுவலக நடைமுறைகள்தான் மேலோங்கி
நிற்கும் என தீர்மானிக்கப்பட்டது அதற்கு
காரணம் Institute of
Companies Secretaries of India (ISCI) vs. Paras Jain வழக்கின் தீர்ப்பானது
2019-ல்தான் பகரப்பட்டது.
.
இனிவரும்
காலங்களில், மாற்று தீர்ப்பு எதுவும்
உச்சநீதிமன்றத்தால் பகரப்படும்வரை Institute of
Companies Secretaries of India (ISCI) vs. Paras Jain வழக்கின் அடிப்படையில்
தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் எதிர்
தமிழ்நாடு தகவல் ஆணையம் மற்றும்
பலர். (WP No.16108 of
2019 Order dated 14.10.2019) ஆணையானது
சட்ட வலிமை உள்ள ஆணையாக
திகழும்.
.
தற்போது
ஆவணங்களின் நகலை கோர மனுதாரருக்கு
இரண்டு வழிமுறைகள் அலுவலகத்தில் உள்ள நடைமுறையில் உள்ள
கட்டணத்தை செலுத்தி கோருவது அல்லது த.அ.உ. சட்ட
விதிகளின்படி கட்டணத்தை செலுத்தி கோருவது.
நடைமுறையின்
உள்ள விதிகளின்படி கட்டணத்தை செலுத்தி ஆவணங்களின் நகலை கோரும்போது, ஆவணங்களின்
நகலை விரைவாக பெறலாம். ஆனால்,
த.உஅ. சட்டத்தில்
கோரும்போது, பொது அதிகார அமைப்பு
சொல்லும் தொகையை செலுத்தி ஆவணங்களை
பெற வேண்டிய நிலை என்பதால்,
30 நாட்கள் வரை ஆவணங்களின் நகல்
கிடைக்க கால தாமதம் ஆகலாம்.
.
மேலும்
இந்த முறையில் பொதுவாக மனுதாரர் அலுவலகத்திற்கு
நேரில் சென்றுதான் விண்ணப்பம் செய்யும் நிலை இருக்கும்.த.அ.உ. சட்டத்தின்படியும்
ஆவணங்களின் நகலை கோரலாம் என்ற
நிலையில், அந்த அலுவலகத்திற்கு நேரடியாக
செல்லாமல், வெளியுரில் இருந்து மனு செய்தே
அதற்கான கட்டணத்தை செலுத்தி பெறலாம். ஆகவே மனுதாரரின் தேவைக்கு
ஏற்ப எந்த முறையில் ஆவணங்களை
பெறுவது அவருக்கு வசதியாக இருக்கும் என்பதை
மனுதாரர்தான் முடிவு செய்ய வேண்டும்.
.
உதாரணமாக
மாநகராட்சிகளில் லே அவுட் காப்பி
கேட்டால் அதற்கு கட்டணமாக ரூ.1,000 கோருகின்றார்கள். இனி
வரும் காலங்களில் ஒருவர் அந்த லே
அவுட் காப்பியை த.உ.ச.
வாயிலாக கோரினால், அந்த லே அவுட்
காப்பியின் ஒளிநகலை எடுப்பதற்கான நியாயமான
செலவினங்களை மட்டுமே மனுதாரிடம் இருந்து
மாநகராட்சி கோரமுடியும் ஆனால், இந்த முறையில்
மனுதாரர் 30 நாட்கள்
வரை காத்திருக்க வேண்டும்.
.
இதுவரை
சட்டப் பல்கலைக்கழகத்தில் தோல்வி அடைந்த மாணவர்கள் மட்டுமே விடைத்தாளின் நகலை
பெற முடியும். ஆனால், தற்போதை தீர்ப்பின்படியும்
Central Board of Secondary Education (CBSE) and another vs. Aditya
Bandopadhyaya & Others (2011) 8 SCC 497-படியும்,
தேர்வு எழுதி தேர்வாகி, ஆனால்
பெற்ற மதிப்பெண்கள் நிறைவானதாக இல்லை என்று நினைக்கும்
மாணவர்களும் தகவல் அறியும் உரிமை
சட்டத்தில் அவர்களது விடைத்தாள்களின் நகலை கோருவதற்கு மேற்கண்ட தீர்ப்பு மற்றும் நீதிப்பேராணை வழிவகை செய்கின்றது.
.
தமிழ்நாடு
அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் எதிர்
தமிழ்நாடு தகவல் ஆணையம் மற்றும்
பலர். (WP No.16108 of
2019 Order dated 14.10.2019) ஆணையானது
தகவல் அறியும் உரிமை சட்டத்தின்
வாயிலாக சில அரசு அலுவலகங்களில்
ஆவணங்களை பெறுவதில் இருந்த தடைகளை தகர்தெறிந்த
ஆணையாகும். இந்த சிறப்பான ஆணையை
வழங்கிய மாண்புமிகு நீதியரசருக்கு எனது மனமார்ந்த நன்றியை
தெரிவித்து கொள்கின்றேன். மேலும் இந்த பிரச்சனையை
மாண்புமிகு உயர்நீதிமன்றம் வரை எடுத்து சென்று
மேற்கண்ட ஆணையை பெற காரணமாக
இருந்து சட்டக்கல்லுாரி மாணவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து
கொள்கின்றேன்.
No comments:
Post a Comment