ஒரு குடும்பத்தில்,
விபத்தினால் குடும்பத் தலைவரின் திடீர் இழப்பு என்பது அந்தக் குடும்பத்தை பொருளாதார
ரீதியாக நிலைகுலைய செய்துவிடும். இந்நிலையில், அந்தக் குடும்பத்தின் பொருளாதார நிலையை
உடனடியாகத் துாக்கி பிடிப்பதற்கு விபத்து காப்பீட்டிலிருந்து பெறும் தொகை அந்தக் குடும்பத்திற்கு
மிக உதவியாக இருக்கும். ஆகவே, அனைவரும் விபத்து காப்பீடு பாலிசி வைத்திருப்பது என்பது
மிக அவசியமாகும்.
.
பொதுவாக, பொதுத்துறைக்
காப்பீட்டு நிறுவனத்தில் ரூ.20 இலட்சத்திற்கு ஒரு விபத்து காப்பீடு பாலிசி 10 சதவீத
மருத்துவ செலவு அளிக்கும் வகையில் எடுத்தால், வருடாந்திரப் பிரிமியமாக ரூ.3,000 அளவில்
செலுத்த வேண்டியது வரும். அதன்படி ஒரு இலட்சத்திற்கு
ரூ.150 அளவில் பிரிமியமாகும். ஆனால், குரூப்
பாலிசியில் உறுப்பினர்கள் அதிகம் சேர்வதால், ரூ.10 இலட்சத்திற்கான பாலிசியை நேரடியாகக்
காப்பீட்டு நிறுவனத்தில் எடுப்பதற்கான வழக்கமான பிரிமியம் ரூ.1500-யைவிட, மிகக் குறைவான பிரிமியமே வசூலிக்கப்படும்.
.
பலருக்குத் தெரியாத
இன்னொரு விஸயம், நாம் வைத்திருக்கும் பெரும்பாலான வங்கியின் டெபிட் கார்டுகளில் விபத்து
காப்பீடு உள்ளடக்கியதாக இருக்கும். அதற்கு 3 மாதத்திற்கு ஒரு முறை ஒரு குறிப்பிட்ட
தொகையில் டெபிட் கார்டை உபயோகப்படுத்தி வந்தால்
(வங்கிக்கு ஏற்ப இந்தக் காலம் மற்றும் தொகை மாறுபடும்), கார்டு வைத்திருக்கும்
நபர் விபத்தில் இறக்க நேரிட்டால், வங்கி வழியாக விபத்து காப்பீட்டினைப் பெறலாம். அதற்கு
ஒருவரால் உபயோகப்படுத்தபடும் டெபிட் கார்டில் எந்த அளவிற்கான தொகை விபத்து காப்பீடாக
வழங்கப்படுகின்றது என்ற விபரத்தை வங்கியில் கேட்டுத் தெரிந்து கொண்டு அதன் விபரத்தை
நெருங்கிய உறவினரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
இந்த விபரம் தெரியாமல், விபத்தில் இறந்தவர்களின்
உறவினர்கள் பலர், வங்கியிலிருந்து இந்த விபத்து
காப்பீடு தொகையைப் பெற முயற்சிப்பதே இல்லை. .
.
விபத்து காப்பீடு
போன்றே, மருத்துவ காப்பீடும் மிக அவசியமாகும். மருத்துவ காப்பீட்டில் Floater
Policy-யை முழு குடும்பத்திற்கும் எடுக்கலாம். மருத்துவ காப்பீட்டிலும் எதாகிலும் குருப்
பாலிசியில் சேர்ந்தால் பிரிமியம் குறைவாக இருக்கும். இளம் வயதினருக்கு மிகக் குறைந்த
தொகையாக பிரிமியம் இருக்கும். உதாரணமாக 32 வயது உடையவருக்கு 10 இலட்சத்திற்காக மருத்துவ
காப்பீடு ரூ.8000 அளவிலே இருக்கும். வயது கூடும்போது, பிரிமியமும் கூடும். வயதான பிறகு
மருத்துவ காப்பீடு பாலிசி எடுக்கும்போது, ஏற்கனவே இருக்கும் நோய்களுக்கு (Pre existing diseases) அடுத்த 3 வருடங்களுக்கு (கால அளவு மாறுபடும்) மருத்து
செலவினங்கள் கிடைப்பதில்லை. ஆகவே, இளம் வயதிலேயே பாலிசி எடுத்து அதைத் தொடர்ந்து புதுப்பித்து
வருவது என்பது நல்லதாகும்.
.
ஆயுள் காப்பீடு
பாலிசியில் ஒருவர் எந்த அளவிற்கான தொகைக்குப் பாலிசி எடுக்க வேண்டும் என்று பார்ப்போம்.
ஒருவரின் மாத வருமானம் ரூ.30000 என்றால், அவரது
மறைவிற்கு பிறகு அந்தத் தொகையை மாத வட்டியாக
அவரது குடும்பம் பெற வேண்டும் என்றால், ரூ.50
இலட்சத்தை வங்கியில் டெபாசிட் செய்தால் மட்டுமே, இன்றைய வட்டி விகிதத்தின்படி ரூ.30000 அளவில் மாத வருமானாக அவர்க் குடும்பத்திற்கு கிடைக்கும்.
ரூ.50 இலட்சத்திற்கு ஆயுள் காப்பீட்டிற்கான பிரிமியம் மிக அதிகமானதாக இருக்கும் என்று பலர் யோசிப்பார்கள்.
உண்மைதான். ஆனால், குறைந்த வயதில் (30 முதல் 35 வரையில்) Pure Term Policy எடுத்தால்,
பிரிமியம் மிகக் குறைவாகவே இருக்கும். இதில் கட்டும் பிரிமியம் தொகை எதுவும் பாலிசியின்
முதிர்வில் திரும்ப கிடைக்காது ஆனால் பிரிமியம் கட்டும் வரை காப்பீடு அமலில் இருக்கும். ஆகவே, குடும்ப நலன் கருதி, முதலில் மாத வருமானத்தின்
அடிப்படையாகக் கொண்டு, Pure Term Policy-தான் எடுக்க வேண்டும். ஆயுள் காப்பீடு பாலிசி
எடுக்கும்போது, எடுத்த உடனே money back policy போன்றவற்றை எடுக்கக்கூடாது ஏனெனில் அதற்கான
பிரிமியம் மிக அதிகமாக இருக்கும் ஆனால் Sum Insured குறைவானதாக இருக்கும். முதலில்
Pure Term Policy, பின்னர்ப் பொருளாதார நிலை மேம்படும்போது, Term Policy (கட்டும் பிரிமியம்
போனசோடு சேர்த்து முதிர்வில் கிடைக்கும் அதற்கு பிறகு சேமிப்பைக் கணக்கில் கொண்டு
money back policy போன்றவற்றை எடுக்கலாம். பொதுவாக ஆயுள் காப்பீடு பாலிசி வைத்திருப்பவர்
விபத்தில் இறந்தால், பாலிசி தொகை இரட்டிப்பாக
கிடைக்கும்.
.
காப்பீடுகள் வைத்திருந்தால்
மட்டும் போதுமான அல்ல. அந்த காப்பீட்டின் விபரங்கள் அனைத்தையும் விபரமாக ஒரு கோப்பில்
இட்டு, ஒருவரின் மறைவிற்கு பிறகு எவ்வாறு பணம் பெறுவது என்ற விபரங்களை அதில் தெளிவாக
எழுதி வைக்க வேண்டும் தீ என்று சொன்னால் நாக்கு சுட்டுவிடாது. ஆகவே, ஒருவரின் மறைவிற்குப்
பிறகான விஷயத்தை பற்றி எப்படி வீட்டில் பேசுவது
என்று யோசிக்காமல் அனைத்து விபரங்களையும் குடும்பத்தாருக்குத் தெளிவாக எடுத்துக் கூறி
புரிய வைக்க வேண்டும்.
No comments:
Post a Comment